ரூ.1,500 லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரிக்கு 2 ஆண்டு ஜெயில் தானே செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு

ரூ.1,500 லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரிக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தானே செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.
தானே,
ரூ.1,500 லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரிக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தானே செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.
ரூ.1,500 லஞ்சம்நவிமும்பை, கோபர்கிரைனே செக்டார் 19–ல் ரானாராம் என்பவருக்கு சொந்தமாக 2 கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு உரிமம் கேட்டு அவர், அங்குள்ள அரசு அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார். அவரது விண்ணப்பத்தை பரிசீலனை செய்த கடைகளுக்கு உரிமம் வழங்கும் அதிகாரி மனோகர் ரூ.2 ஆயிரம் லஞ்சம் தந்தால் உடனடியாக உரிமம் தருவதாக ரானாராமிடம் கூறினார்.
இது குறித்து ரானாராம் லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரிடம் புகார் அளித்தார். 2010–ம் ஆண்டு மார்ச் 29–ந்தேதி மனோகர், ரானாராமிடம் இருந்து ரூ.1500 லஞ்சமாக பெற்றபோது கையும், களவுமாக லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் சிக்கினர்.
2 ஆண்டு ஜெயில்லஞ்ச ஒழிப்பு துறையினர் மனோகர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு மீதான விசாரணை தானே செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது.
வழக்கை விசாரித்த லஞ்சஒழிப்பு துறை சிறப்பு நீதிபதி பி.பி. ஜாதவ், லஞ்சம் வாங்கி சிக்கிய அரசு அதிகாரி மனோகருக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி தீர்ப்பு கூறினார்.