பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு எதிர்ப்பு தி.மு.க., காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்


பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு எதிர்ப்பு தி.மு.க., காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 Nov 2017 4:15 AM IST (Updated: 9 Nov 2017 2:30 AM IST)
t-max-icont-min-icon

பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விருத்தாசலம்,

பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் நவம்பர் 8–ந் தேதியான நேற்று கருப்பு தினமாக அனுசரித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். அதன்படி கடலூர் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் விருத்தாசலம் கடைவீதியில் மாவட்ட செயலாளர் கணேசன் எம்.எல்.ஏ. தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதேபோல் வடலூரில் பஸ்நிலையம் அருகே காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். வடலூர் தலைவர் சேக்கரையாஸ், கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர துணைதலைவர் ஹிலாராமன் வரவேற்றார். மாநில சாத்துக்குழு உறுப்பினர் வக்கீல் சந்திரசேகரன், மாவட்ட துணைதலைவர் சிங்காரம், குறிஞ்சிப்பாடி வட்டார தலைவர் ராமச்சந்திரன், கடலூர் நகர தலைவர் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கருப்பு பணத்தை ஒழிப்பதாக கூறி பணமதிப்பு நீக்க அறிவிப்பு செய்து மக்களின் வாழ்வாதாரத்தை பாழாக்கிய மத்திய அரசை கண்டித்து கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் சிதம்பரம் காந்தி சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.


Next Story