நவிமும்பை மாநகராட்சி மேயராக தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் தேர்வு காங்கிரஸ் வேட்பாளர் துணை மேயர் ஆனார்


நவிமும்பை மாநகராட்சி மேயராக தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் தேர்வு காங்கிரஸ் வேட்பாளர் துணை மேயர் ஆனார்
x
தினத்தந்தி 10 Nov 2017 3:17 AM IST (Updated: 10 Nov 2017 1:20 PM IST)
t-max-icont-min-icon

நவிமும்பை மாநகராட்சி மேயராக தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் ஜெயந்த் சுதர் தேர்வானார். காங்கிரசை சேர்ந்த பெண் வேட்பாளர் மந்தாகினி மாத்ரே துணை மேயர் ஆனார்.

தானே, 

நவிமும்பை மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் மகேந்திர கல்யாண்கர் தேர்தல் அதிகாரியாக செயல்பட்டார். மேயர் பதவிக்கு தேசியவாத காங்கிரஸ் சார்பில் ஜெயந்த் சுதரும், சிவசேனா சார்பில் சோம்நாத் வஸ்கரும் போட்டியிட்டனர்.

துணை மேயர் பதவிக்கான களத்தில் காங்கிரஸ் வேட்பாளர் மந்தாகினி மாத்ரேயும், சிவசேனா சார்பில் துவார்காந்தும் போட்டியிட்டனர். மாநகராட்சி கவுன்சிலர்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர். நேற்று மாலையே வாக்குகள் எண்ணப்பட்டு உடனடியாக முடிவு அறிவிக்கப்பட்டது. அதன்படி, நவிமும்பை மாநகராட்சியை தேசியவாத காங்கிரஸ் மீண்டும் தக்க வைத்தது.

தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் ஜெயந்த் சுதர் 67 வாக்குகள் பெற்று, மேயர் பதவியை தட்டிச்சென்றார். அவரை எதிர்த்து களம் கண்ட சிவசேனா வேட்பாளர் சோம்நாத் வஸ்கருக்கு வெறும் 38 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.

இதேபோல், காங்கிரஸ் பெண் வேட்பாளர் மந்தாகினி மாத்ரே துணை மேயர் ஆனார். அவருக்கு அதிகபட்சமாக 64 வாக்குகள் கிடைத்தன. சிவசேனா வேட்பாளர் துவார்காந்த் வெறும் 38 வாக்குகள் மட்டுமே பெற்று, வெற்றி வாய்ப்பை இழந்தார்.

பா.ஜனதாவை சேர்ந்த 6 கவுன்சிலர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல், புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.


Next Story