பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதார ஆய்வாளர் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதார ஆய்வாளர் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 Nov 2017 4:10 PM IST (Updated: 10 Nov 2017 4:10 PM IST)
t-max-icont-min-icon

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகையில் சுகாதார ஆய்வாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்ட தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் ஒரு சுகாதார துணை மையத்திற்கு ஒரு சுகாதார ஆய்வாளர் என்ற அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும்.

டெங்கு களப்பணியில் உள்ள பிரச்சினைகளை முறைப்படுத்த வேண்டும். பணியாளர்களின் களப்பணி நேரத்தை ஒழுங்குப்படுத்த வேண்டும். பல்நோக்கு சுகாதார பணியாளர்களுக்கு பணி மாறுதல் கலந்தாய்வினை உடனடியாக நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. 

Next Story