கிராம நிர்வாக அலுவலர் மீது லாரியை ஏற்றி கொலை செய்ய முயற்சி 2 பேர் கைது


கிராம நிர்வாக அலுவலர் மீது லாரியை ஏற்றி கொலை செய்ய முயற்சி 2 பேர் கைது
x
தினத்தந்தி 12 Nov 2017 3:45 AM IST (Updated: 12 Nov 2017 12:05 AM IST)
t-max-icont-min-icon

பரமக்குடி அருகே அனுமதியின்றி மணல் அள்ளியவர்களை பிடிக்கச் சென்றபோது கிராம நிர்வாக அலுவலர் மீது லாரியை ஏற்றி கொலை செய்ய முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பரமக்குடி,

பரமக்குடி அருகே அரசடிவண்டல் வைகை ஆற்றில் லாரி, டிராக்டர்களில் அனுமதியின்றி மணல் அள்ளிச் செல்லப்படுவதாக தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதுகுறித்து ஆய்வு செய்வதற்காக அந்த பகுதியை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் சதீஷ் மற்றும் போலீசார் அங்கு சென்றனர்.

அப்போது கங்கை கொண்டான் கிராமத்தை சேர்ந்த விமலன்(வயது 41), கருமலையான்(21) ஆகிய 2 பேரும் லாரியில் அனுமதியின்றி மணல் அள்ளிக்கொண்டிருந்தனர். அப்போது போலீசாரை கண்டதும் அவர்கள் லாரியை ஓட்டிக்கொண்டு தப்பிக்க முயன்றுள்ளனர். அப்போது அவர்களை தடுக்க முயன்ற கிராம நிர்வாக அலுவலர் சதீஷ் மீது லாரியை ஏற்றி கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து போலீசார் அந்த லாரியை மடக்கி பிடித்து பறிமுதல் செய்ததுடன் இதுதொடர்பாக விமலன், கருமலையான் ஆகியோரையும் பிடித்தனர். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் சதீஷ் அளித்த புகாரின் பேரில் நயினார்கோவில் போலீசார் வழக்கு பதிந்து விமலன், கருமலையான் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.


Next Story