ஆற்றின் கரையோரத்தில் மண் அள்ளுவதற்கு தடை விதிக்க வேண்டும் கிராம மக்கள் கோரிக்கை


ஆற்றின் கரையோரத்தில் மண் அள்ளுவதற்கு தடை விதிக்க வேண்டும் கிராம மக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 14 Nov 2017 4:15 AM IST (Updated: 14 Nov 2017 2:40 AM IST)
t-max-icont-min-icon

குடவாசல் அருகே, ஆற்றின் கரையோரத்தில் மண் அள்ளுவதற்கு தடை விதிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே நெய்குப்பை கிராமத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நெய்குப்பை கிராமத்தில் நரசிங்கம் ஆற்றின் கரையோரத்தில் குளம் உள்ளது. இந்த குளத்தில் கடந்த மாதம் வண்டல் மண் எடுக்கும் பணி நடைபெற்றது. அப்போது குளத்தில் அதிக அளவில் மண் எடுக்கப்பட்டுள்ளது.

இதனால் கடந்த 10 நாட்களாக பெய்த தொடர் மழையால் நரசிங்கம் ஆற்றின் கரை உடைந்துள்ளது. இதனால் தண்ணீர் ஊருக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே ஆற்றின் கரையோரத்தில் மண் அள்ள தடை விதிக்க வேண்டும். உடைந்த கரையை சீரமைக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 

Next Story