நவிமும்பையில் வங்கியில் 27 லாக்கர்களை உடைத்து நகை, பணம் கொள்ளை
பூமிக்கடியில் 50 அடி நீளத்துக்கு சுரங்கம் அமைத்து வங்கியில் புகுந்து 27 லாக்கர்களை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடிவருகின்றனர்.
மும்பை,
அவரது நகைகளை வங்கி அதிகாரி ஒருவர் வாங்கிக்கொண்டு லாக்கர்கள் இருக்கும் அறையை திறந்து உள்ளே சென்றார். அப்போது அந்த அறைக்குள் அவருக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது. அங்கிருந்த 27 லாக்கர்கள் உடைக்கப்பட்டு இருந்தன.
அதில், இருந்த கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நகைகள் மற்றும் பணம் காணாமல் போயிருந்தன. லாக்கர் அறையில் பூமிக்கடியில் துளை ஒன்றும் இருந்தது. இதை பார்த்து பதறிப்போன அவர் ஓடிவந்து வங்கி மேலாளரிடம் கூறினார்.
இந்த கொள்ளை சம்பவம் பற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் போலீசார் வங்கிக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். விடுமுறை தினமான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாட்கள் வங்கி மூடப்பட்டு இருந்து உள்ளது.இதை பயன்படுத்திக்கொண்ட கொள்ளையர்கள் வங்கியையொட்டி உள்ள ஒரு கடைக்குள் புகுந்து உள்ளனர். பின்னர், அங்கிருந்தபடியே பூமிக்கடியில் 50 அடி நீளத்துக்கு பள்ளம் தோண்டி சுரங்கம் அமைத்து வங்கிக்குள் புகுந்துள்ளனர். இதையடுத்து அங்கிருந்த 27 லாக்கர்களை உடைத்து நகைகள் மற்றும் பணத்தை அள்ளி சென்றுள்ளது தெரியவந்தது.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளை கும்பல் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Related Tags :
Next Story