மோசடி வழக்கில் தலைமறைவு: நிதி நிறுவன உரிமையாளர் மதுரை கோர்ட்டில் சரண்


மோசடி வழக்கில் தலைமறைவு: நிதி நிறுவன உரிமையாளர் மதுரை கோர்ட்டில் சரண்
x
தினத்தந்தி 16 Nov 2017 4:30 AM IST (Updated: 16 Nov 2017 1:20 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை அடுத்த மத்தம்பாலையில் நிர்மல்கிருஷ்ணா என்ற பெயரில் தனியார் நிதிநிறுவனம் இயங்கி வந்தது.

மதுரை,

குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை அடுத்த மத்தம்பாலையில் நிர்மல்கிருஷ்ணா என்ற பெயரில் தனியார் நிதிநிறுவனம் இயங்கி வந்தது. அதன் உரிமையாளர் நிர்மலன் (வயது 50). இந்த நிறுவனத்தில் தமிழக, கேரள மாநிலங்களை சேர்ந்த 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பணம் செலுத்தி வந்துள்ளனர்.

இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிர்மலன், நிதிநிறுவனத்தை மூடிவிட்டு தலைமறைவானார். அவரது நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்ட ரூ.2,500 கோடி வரை மோசடி செய்யப்பட்டு இருப்பதாக புகார் எழுந்தது. இதுபற்றி வாடிக்கையாளர்கள் நாகர்கோவில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நிர்மலனை தேடிவந்தனர். இந்தநிலையில் மதுரை முதலீட்டாளர் நல பாதுகாப்பு கோர்ட்டில் நிர்மலன் நேற்று சரணடைந்தார். அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிபதி மீரா சுமதி உத்தரவிட்டார்.

அதன்பேரில் போலீசார் அவரை மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story