நடுக்கடலில் மீன்பிடித்த மீனவர்கள் 10 பேர் சிறைபிடிப்பு இலங்கை கடற்படையினர் அட்டூழியம்
நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த நாகை மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றனர்.
நாகப்பட்டினம்,
நாகையை அடுத்த அக்கரைப்பேட்டை திடீர்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கோபால் மனைவி கிருஷ்ணவேனி (வயது26). இவருக்கு சொந்தமான விசைப்படகில் அவரது கணவர் கோபால் (30), அக்கரைப்பேட்டையை சேர்ந்த சிவநாதன் (35), பிரசாத் (30), நவீன் (20), ராமு (20), காளியப்பன் (50), சின்னையன் (50), தமிழ்செல்வன் (33), கீச்சாங்குப்பத்தை சேர்ந்த ஜெயராமன் (35), அறிவழகன் (33) ஆகிய 10 பேரும் கடந்த 13-ந்தேதி கடுவையாற்றில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நேற்று அதிகாலை கோடியக்கரைக்கு அருகே நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் நாகை மீனவர்களின் படகை சுற்றி வளைத்தனர். பின்னர் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி, அவர்களை சிறைபிடித்து சென்றனர். அவர்களது படகு மற்றும் மீன்கள், மீன்பிடி வலைகள் மற்றும் மீன்பிடி சாதனங்களையும் கைப்பற்றி இலங்கைக்கு கொண்டு சென்றனர்.
இலங்கை கடற்படையினரால் நாகை அக்கரைப்பேட்டை மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டதை அறிந்த, மீனவர்களின் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதைதொடர்ந்து அக்கரைப்பேட்டை பெண்கள் சிலர் மண்எண்ணெய்யை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். உடனே அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டனர்.

Related Tags :
Next Story