குஜராத் சட்டசபை தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி சரத்பவார் பேட்டி
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் விதர்பா மண்டலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
நாக்பூர்,
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் விதர்பா மண்டலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதையொட்டி, கட்சிரோலியில் நிருபர்களை சந்தித்த அவர், ‘‘குஜராத் சட்டசபை தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைக்கப்படும் என்றும், அங்கு காங்கிரசுக்கு சாதகமான சூழல் நிலவுவதாகவும் குறிப்பிட்டார். மேலும், 2019 பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, எதிர்க்கட்சிகளின் சார்பில் மாபெரும் கூட்டணி அமைக்கப்படும் என்று கூறிய அவர், மத்திய அரசின் மீது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுவதாகவும் கூறினார்.
ஜி.எஸ்.டி. வரி பற்றி கருத்து தெரிவித்த அவர், ‘‘வரிவிதிப்பு இன்றியமையாதது. ஆனால், பொதுமக்களை பிரச்சினைக்கு உட்படுத்தாத வகையில், அதன் வடிவம் இருக்க வேண்டும்’’ என்றார்.
Related Tags :
Next Story