பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி சார்பில் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் பச்சிளங்குழந்தைகள் பராமரிப்பு வார விழா

பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி சார்பில்  தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் பச்சிளங்குழந்தைகள் பராமரிப்பு வார விழா
x
தினத்தந்தி 17 Nov 2017 9:00 PM GMT (Updated: 17 Nov 2017 2:14 PM GMT)

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில், திருச்செந்தூர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி சார்பில் பச்சிளங்குழந்தைகள் பராமரிப்பு வார விழா நிகழ்ச்சி நடந்தது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில், திருச்செந்தூர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி சார்பில் பச்சிளங்குழந்தைகள் பராமரிப்பு வார விழா நிகழ்ச்சி நடந்தது.

பச்சிளங்குழந்தை பராமரிப்பு விழா

திருச்செந்தூர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரியின் குழந்தைகள் நல செவிலியர்துறை, மாணவ செவிலியர் சங்கம் சார்பில், தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில், குழந்தைகள் நல பிரிவுடன் இணைந்து பச்சிளங்குழந்தைகள் பராமரிப்பு வார விழா நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது.

தாய்ப்பால் அவசியம்

நிகழ்ச்சியில் கல்லூரியின் குழந்தைகள் நலத்துறை உதவி பேராசிரியர் ஹேமா வரவேற்றார். தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி குழந்தைகள் நலத்துறை தலைவர் டாக்டர் அருணாசலம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசும், நோய் தொற்று மற்றும் வயிற்று போக்கினால் குழந்தைகள் இறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது. இதனை தவிர்க்க தாய்மார்கள் குழந்தைகளுக்கு தாய் பால் கொடுக்க வேண்டும். குழந்தையை சீராக பராமரிக்க வேண்டும் என்று கூறினார்.

பராமரிப்பு முறைகள்

நிகழ்ச்சியில் கல்லூரியின் 3–ம் ஆண்டு மாணவிகள் தமிழ்மதி, சுதா, சுஜி, சிவானி, வள்ளியம்மை ஆகியோர், பச்சிளங்குழந்தைகளின் பராமரிப்பு முறைகள் குறித்து தாய்மார்களுக்கு எடுத்துரைத்தனர். முன்னதாக கல்லூரி உதவி பேராசிரியர் மற்றும் மாணவர் நல சங்கத்தின் ஆலோசகர் சுமதி, டாக்டர் அருணாசலத்திற்கு நினைவு பரிசு வழங்கினார். களப்பயிற்சி ஆசிரியை அருளரசி நன்றி கூறினார்.

Next Story