கூட்டுறவு கடன் சங்கத்தில் கொள்ளை முயற்சி: தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
மதுரை மாவட்டம் கச்சிராயன்பட்டி நான்குவழி சாலை அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது.
கொட்டாம்பட்டி,
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே உள்ள கச்சிராயன்பட்டி நான்குவழி சாலை அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் கடந்த மாதம் 10–ந்தேதி கொள்ளை முயற்சி நடைபெற்றது. இதில் சம்பந்தபட்ட குற்றவாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினரின் தேடுதல் நடவடிக்கையில் வங்கி கொள்ளை முயற்சி வழக்கில் தொடர்புடைய பார்த்தீபன்(வயது 27) என்பவர் கடந்த மாதம் 16–ந்தேதி கைது செய்யப்பட்டார்.
மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த மானாமதுரையை சேர்ந்த தங்கராஜூ(37), கார்மேககண்ணன்(20), திருப்புவனத்தை சேர்ந்த கணேசன்(28), அவருடைய சகோதரர் பிரேம்குமார் (25) ஆகிய 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்க பயன்படுத்திய கார், கியாஸ் வெல்டர், கியாஸ் சிலிண்டர், பட்டா கத்தி, அரிவாள் ஆகியவை கைப்பற்றப்பட்டது.