வயல்களில் ஆழ்குழாய் கிணறு அமைத்து தண்ணீர் விற்பனை 4 ஆயில் என்ஜின் மோட்டார்கள் பறிமுதல்


வயல்களில் ஆழ்குழாய் கிணறு அமைத்து தண்ணீர் விற்பனை 4 ஆயில் என்ஜின் மோட்டார்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 17 Nov 2017 9:45 PM GMT (Updated: 17 Nov 2017 7:30 PM GMT)

திருச்சி மாவட்டம் முசிறி பகுதியில் பல இடங்களில் அரசு அனுமதியின்றி தண்ணீர் எடுத்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக முசிறி கோட்டாட்சி தலைவருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தொட்டியம்,

திருச்சி மாவட்டம் முசிறி பகுதியில் பல இடங்களில் அரசு அனுமதியின்றி தண்ணீர் எடுத்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக முசிறி கோட்டாட்சி தலைவருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் கோட்டாட்சி தலைவர் ராஜ்குமார் முசிறி அருகே உள்ள உமையாள்புரம் பகுதியில் திடீர் சோதனை மேற்கொண்டார். அப்போது உமையாள்புரத்தைச் சேர்ந்த செல்வம், அதே ஊரைச் சேர்ந்த புருசோத்தம்மன் ஆகியோர் வாய்க்கால் கரையோரம் உள்ள தங்களது வயல்களில் அரசு அனுமதியின்றி ஆழ்குழாய் கிணறு அமைத்து தண்ணீர் எடுத்து டேங்கர் லாரிகளுக்கு தண்ணீர் விற்பனை செய்ததை கண்டுபிடித்து விசாரணை நடத்தினார். மேலும் இருவரிடமிருந்தும் நான்கு ஆயில் என்ஜின் பம்புசெட் மோட்டார்களை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டார். கோட்டாட்சியரின் ஆய்வின் போது முசிறி தாசில்தார் கருணாநிதி, மண்டல துணை தாசில்தார் வீரப்பன், வருவாய் ஆய்வாளர் முத்து, கிராம நிர்வாக அதிகாரி முத்துச்செல்வன் ஆகியோர் உடன் சென்றனர்.


Next Story