களியக்காவிளை அருகே முதியவர் வெட்டிக்கொலை கொலையளிக்கு போலீஸ் வலைவீச்சு


களியக்காவிளை அருகே முதியவர் வெட்டிக்கொலை கொலையளிக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 18 Nov 2017 3:45 AM IST (Updated: 18 Nov 2017 1:28 AM IST)
t-max-icont-min-icon

களியக்காவிளை அருகே முதியவரை வெட்டிக்கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

களியக்காவிளை,

குமரி–கேரள எல்லைப்பகுதியான களியக்காவிளையை அடுத்த முள்ளுவிளை பகுதியில் வசித்து வருபவர் தங்கையன் நாடார் (வயது 73), விவசாயி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில் இரவு தூங்கச்சென்றவர் நேற்று காலை வெகுநேரமாகியும் வெளியே வரவில்லை.

இதனால் சந்தேகமடைந்த அவரது உறவினர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது பலத்த வெட்டுகாயங்களுடன் தங்கையான் நாடார் இரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து உறவினர்கள் பாறசாலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலை அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக பாறசாலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இவருக்கு சொத்துக்கள் அதிகஅளவில் உள்ளதால் சொத்துக்காக அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு காரணத்திற்காக கொலை செய்யப்பட்டாரா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கொலையாளிளை வலைவீசி தேடிவருகிறார்கள்.


Next Story