திருப்பூர் முருங்கப்பாளையத்தில் தனியார் மருத்துவனையில் ரூ.58 ஆயிரம் திருடிய மர்ம நபர் போலீசார் விசாரணை


திருப்பூர் முருங்கப்பாளையத்தில் தனியார் மருத்துவனையில் ரூ.58 ஆயிரம் திருடிய மர்ம நபர் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 18 Nov 2017 3:45 AM IST (Updated: 18 Nov 2017 2:06 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் முருங்கபாளையத்தில் ராம்ஸ் மருத்துவமனை உள்ளது. இங்கு கீழ்தளத்தில் மருந்தகம் செயல்பட்டு வருகிறது. இதில் கடந்த 15–ந்தேதி இரவு பெண் ஊழியர் பணியில் இருந்தார்.

அனுப்பர்பாளையம்,

திருப்பூர் முருங்கபாளையத்தில் ராம்ஸ் மருத்துவமனை உள்ளது. இங்கு கீழ்தளத்தில் மருந்தகம் செயல்பட்டு வருகிறது. இதில் கடந்த 15–ந்தேதி இரவு பெண் ஊழியர் பணியில் இருந்தார். நள்ளிரவு நேரத்தில் அவர் அருகில் இருந்த அறைக்கு சென்ற நேரத்தில் பார்வையாளர் இருக்கையில் இருந்த ஒரு மர்ம நபர் அந்த மருந்தகத்துக்குள் நுழைந்து அங்கிருந்த ரூ.58 ஆயிரத்து 300–ஐ திருடிச்சென்றுவிட்டார்.

 இதுபற்றி அந்த மருத்துவமனை ஊழியர் 15 வேலம்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் மருத்துவமனையின் வரவேற்பு அறையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்த போது, சம்பவத்தன்று நள்ளிரவு 1 மணிக்கு சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் வரவேற்பு அறையில் 30 நிமிடங்கள் உட்கார்ந்திருப்பதும், அவர் மருந்தகத்திற்குள் சென்று அங்கிருந்த பணத்தை திருடிக்கொண்டு செல்வதும் பதிவாகி இருந்தது.

 மேலும் அங்கு ஒரு பண்டலில் சுற்றி வைக்கப்பட்டிருந்த 10 மருந்து ஊசிகளை பணம் என்று நினைத்து அதையும் மர்ம நபர் எடுத்து சென்றது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து 15 வேலம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.


Next Story