விழுப்புரம் சுதாகர் நகரில் ஆக்கிரமிப்பை அகற்றி சாலை வசதி செய்து தர வேண்டும் கலெக்டரிடம் ஆம்ஆத்மி கட்சியினர் மனு
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியனிடம் ஆம்ஆத்மி கட்சியின் விழுப்புரம் மாவட்ட செயலாளர் அருள் இருதயராஜ், தலைவர் முகம்மதுயாசின், மயிலம் சட்டமன்ற தொகுதி தலைவர் ராமலிங்கம் மற்றும் நிர்வாகிகள் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியனிடம் ஆம்ஆத்மி கட்சியின் விழுப்புரம் மாவட்ட செயலாளர் அருள் இருதயராஜ், தலைவர் முகம்மதுயாசின், மயிலம் சட்டமன்ற தொகுதி தலைவர் ராமலிங்கம் மற்றும் நிர்வாகிகள் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–
விழுப்புரம் நீதிமன்ற வளாகத்திற்கு எதிரே உள்ள சுதாகர் நகர் பகுதியில் உள்ள சாலை பராமரிப்பு இல்லாத காரணத்தால் குண்டும், குழியுமாக உள்ளது. மேலும் ஆக்கிரமிப்புகளால் தற்போது சாலை மிகவும் குறுகலாகவும் காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். குறிப்பாக இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் அடிக்கடி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவாக்கி சிமெண்டு சாலை அமைக்க உடனே மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவை பெற்ற கலெக்டர் சுப்பிரமணியன், இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.