நெல்லிக்குப்பம்–புதுச்சத்திரம் இடையே தண்டவாளத்தில், டிராலி மூலம் ரெயில்வே அதிகாரிகள் ஆய்வு


நெல்லிக்குப்பம்–புதுச்சத்திரம் இடையே தண்டவாளத்தில், டிராலி மூலம் ரெயில்வே அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 18 Nov 2017 8:30 PM GMT (Updated: 18 Nov 2017 8:17 PM GMT)

நெய்வேலியை அடுத்த மந்தாரக்குப்பம் ரெயில் நிலையத்துக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு 4 இடங்களில் தண்டவாள பகுதிகளில் வெடிகுண்டு புதைக்கப்பட்டிருப்பதாகவும், அது அடுத்த மாதம்(டிசம்பர்) 6–ந் தேதி வெடிக்கும் என மர்ம கடிதம் ஒன்று வந்தது.

நெல்லிக்குப்பம்,

நெய்வேலியை அடுத்த மந்தாரக்குப்பம் ரெயில் நிலையத்துக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம கடிதம் ஒன்று வந்தது. அதில் மந்தாரக்குப்பம், புதுச்சத்திரம் உள்பட 4 இடங்களில் தண்டவாள பகுதிகளில் வெடிகுண்டு புதைக்கப்பட்டிருப்பதாகவும், அது அடுத்த மாதம்(டிசம்பர்) 6–ந் தேதி வெடிக்கும் எனவும் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து ரெயில்வே அதிகாரிகள், ரெயில்வே போலீசார் மற்றும் கடலூர் மாவட்ட போலீசார் தண்டவாள பகுதிகளில் ஆய்வு செய்தனர். ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நெல்லிக்குப்பத்தில் இருந்து புதுச்சத்திரம் வரை நேற்று காலை ரெயில்வே அதிகாரி ஆனந்த் தலைமையில் ஊழியர்கள் டிராலியில் சென்று தண்டவாள பகுதியில் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது தண்டவாள பகுதியில் ஏதேனும் மர்ம பொருட்கள் கிடக்கிறதா? வெடி மருந்துகள் உள்ளனவா? தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதா? கேட் கீப்பர் பணியில் உள்ளனரா? என்பது குறித்து ஆய்வு செய்தனர்.


Next Story
  • chat