போட்டி நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்பதற்காக விவசாயிகள் ரெயிலில் டெல்லி பயணம்


போட்டி நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்பதற்காக விவசாயிகள் ரெயிலில் டெல்லி பயணம்
x
தினத்தந்தி 19 Nov 2017 4:15 AM IST (Updated: 19 Nov 2017 2:47 AM IST)
t-max-icont-min-icon

போட்டி நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்பதற்காக அய்யாகண்ணு தலைமையில் விவசாயிகள் ரெயிலில் டெல்லி பயணம்

திருச்சி,

நதிகளை இணைக்க வேண்டும். விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு தலைமையில் டெல்லி ஜந்தர்மந்தரில் முதல் கட்டமாக 41 நாட்களும், 2-ம் கட்டமாக 100 நாட்களும் போராட்டம் நடந்தது. அப்போது டெல்லியில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் இந்தியா முழுவதும் உள்ள 180 விவசாய சங்கங்களை ஒருங்கிணைத்து டெல்லியில் வரும் 20, 21, 22 ஆகிய தேதிகளில் போட்டி நாடாளுமன்ற கூட்டத்தை நடத்த முடிவு செய்தனர். நாடு முழுவதும் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாய உற்பத்தி பொருட்களுக்கு கட்டுப்படியான கொள்முதல் விலையை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாகண்ணு தலைமையில் திருச்சியில் இருந்து ஏராளமான விவசாயிகள் நேற்று காலை 9 மணிக்கு ரெயில் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றனர். இது குறித்து அய்யாகண்ணு கூறுகையில், “டெல்லியில் நடைபெற உள்ள போட்டி நாடாளுமன்ற கூட்டத்தில் இந்தியாவில் உள்ள 5 லட்சம் விவசாயிகள் பங்கேற்கிறோம். வழக்கமாக நாடாளுமன்ற கூட்டத்தொடர் நவம்பர் 20-ந் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் விவசாயிகள் போட்டி கூட்டம் நடத்துவதாக அறிவித்ததால் நாடாளுமன்ற கூட்டத்தொடரை டிசம்பர் 20-ந் தேதிக்கு மாற்றி வைத்துள்ளனர். இதுவே விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி. எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை மத்திய அரசுக்கு எதிராக போராடுவோம்” என்று கூறினார்.


Next Story