நெல்லை மாவட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் இன்று வருகை விழாவில் கலந்து கொள்கிறார்
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நெல்லை மாவட்டத்துக்கு இன்று (திங்கட்கிழமை) வருகிறார். அவர், பாவூர்சத்திரத்தில் நடைபெறும் முப்பெரும் விழாவில் கலந்து கொள்கிறார்.
நெல்லை,
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நெல்லை மாவட்டத்துக்கு இன்று (திங்கட்கிழமை) வருகிறார். அவர் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். மு.க.ஸ்டாலின் நேற்று இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். அங்கிருந்து விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வந்தார். அவர், அங்குள்ள ராம்கோ விருந்தினர் மாளிகையில் தங்கினார்.
மு.க.ஸ்டாலின் இன்று காலை (திங்கட்கிழமை) ராஜபாளையத்தில் இருந்து புறப்பட்டு நெல்லை மாவட்டம் வருகிறார். அவருக்கு மாவட்ட எல்லையான கரிவலம்வந்தநல்லூரில் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாபன் தலைமையில் வரவேற்பு கொடுக்கப்படுகிறது.
வரவேற்பை ஏற்றுக்கொண்டு மு.க.ஸ்டாலின் அங்கு இருந்து புறப்பட்டு சங்கரன்கோவிலில் நடைபெறும் முன்னாள் எம்.பி.தங்கவேலு இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தி பேசுகிறார்.
பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டு மதியம் 12 மணியளவில் சுரண்டை வருகிறார். அங்கு தி.மு.க. சார்பில் கட்டப்பட்டு இருக்கும் கலைஞர் அறிவாலயத்தை திறந்து வைத்து பேசுகிறார். இந்த நிகழ்ச்சியை முடித்து விட்டு குற்றாலம் செல்கிறார். அங்கு மதிய உணவை முடித்து விட்டு ஓய்வெடுக்கிறார்.
மாலை 6 மணிக்கு பாவூர்சத்திரம் கே.டி.சி. நகர் பகுதியில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சட்டமன்ற வைரவிழா, முரசொலி பவளவிழா மற்றும் மாற்றுக்கட்சியினர் தி.மு.க.வில் இணையும் விழா ஆகிய முப்பெரும் விழா நடக்கிறது. இந்த விழாவில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார். அவர் முன்னிலையில் பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் தி.மு.க.வில் இணைகிறார்கள். நிகழ்ச்சியை முடித்து விட்டு அங்கு இருந்து புறப்பட்டு விருதுநகர் மாவட்டம் துலுக்கர்பட்டியில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு செல்கிறார்.
மு.க.ஸ்டாலின் வருகையொட்டி அவர் செல்லும் வழியில் கட்சி கொடிகள், அலங்கார வளைவுகள் வைக்கப்பட்டு உள்ளள. அவரை வரவேற்று பல்வேறு இடங்களில் டிஜிட்டல் போர்டுகள் வைக்கப்பட்டு இருக்கின்றன.

Related Tags :
Next Story