திருவாரூர், நாகை மாவட்டங்களில் விவசாயத்தை பாதுகாக்க நிரந்தர நடவடிக்கை கி.வீரமணி வலியுறுத்தல்
திருவாரூர், நாகை மாவட்டங்களில் விவசாயத்தை பாதுகாக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கி.வீரமணி வலியுறுத்தி உள்ளார்.
திருவாரூர்,
திருவாரூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களை திராவிட கழக தலைவர் கி.வீரமணி நேரில் பார்வையிட்டார். முன்னதாக திருவாரூர் அருகே உள்ள பவித்திரமாணிக்கத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது அவர், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மழை வெள்ளத்தால் திருவாரூர், நாகை மாவட்டங்கள் தொடர்ந்து பாதிக்கப்படுகிறது. பாதிக்கப்படும் பகுதியில் தூர்வாருதல், குடிமராமத்து பணிகள் முன்கூட்டியே செய்யாமல், பாதிக்கப்படும்போது கணக்கு காட்டும் வகையில் பணிகள் நடைபெறுகிறது. எனவே திருவாரூர், நாகை மாவட்டங்களில் விவசாயத்தை பாதுகாத்திட நிரந்த தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் பாதிப்பு குறித்து குறைகளை கேட்டறிந்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வோம்.
ரேஷன் கடைகளில் சர்க்கரை விலை உயர்த்தப் பட்டது. தற்போது உளுந்தம் பருப்பும் நிறுத்தப்பட்டுள்ளது. இனி அரிசியும் இல்லை என கூறுவார்கள். படிப்படியாக பொருட்களை குறைத்து கடைசியாக ரேஷன் கடையை மூடும் நிலை இருந்து வருகிறது. மத்திய அரசு சொல்வதை தமிழக அரசு கேட்கிறது. எதையும் தட்டி கேட்கின்ற நிலையில் இல்லை. உணவு பாதுகாப்பு திட்டத்தை முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா எதிர்த்த நிலையில் தற்போதைய அரசு அந்த திட்டத்தில் கையெழுத்து போட்டுள்ளது.
தமிழக கவர்னர் பிரச்சினையில் ஜனநாயக ரீதியில் எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்து வருகிறது. பேச வேண்டிய அமைச்சர்கள் பேசமால், அது தவறு இல்லை என்றே கூறி வருகின்றனர். அரசு தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் வெளி மாநிலத்தவர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் பின்னணி என்ன என்பது தெரியவில்லை. நீட் தேர்விலும் அதிகமாக வெளி மாநில மாணவர்கள் உள்ளே வந்துள்ளனர். எனவே ஆட்சி மாற்றத்தை மக்கள் ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
அதனை தொடர்ந்து அவர், பவித்திரமாணிக்கம், மஞ்சக்குடி, சோளங்கநல்லூர், பருத்தியூர் ஆகிய பகுதிகளை பார்வையிட்டு விவசாயி களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது மாநில துணைத்தலைவர் கலிபூங்குன்றன், பொதுச்செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட தலைவர் கோபால், மாவட்ட செயலாளர் காமராஜ், மாநில விவசாய அணி செயலாளர் மோகன், மாவட்ட துணைத்தலைவர் அருண்காந்தி, பகுத்தறிவு கழக நகர தலைவர் ஈவேரா உள்பட பலர் உடனிருந்தனர்.

Related Tags :
Next Story