நள்ளிரவில் வீடு புகுந்து பேராசிரியர் மனைவியிடம் 7 பவுன் நகைகள் கொள்ளை
திருச்சி அருகே நள்ளிரவில் வீடு புகுந்து பேராசிரியர் மனைவியிடம் 7 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கொள்ளிடம் டோல்கேட்,
திருச்சி மாவட்டம் முக்கொம்பு அருகே உள்ள கொடியாலம் கிராமத்தை சேர்ந்தவர் அருண்(வயது 36). இவர் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் தற்போது திருச்சி அருகே நெ.1 டோல்கேட்டை அடுத்துள்ள கூத்தூர் கீழத்தெருவில் ஒத்திக்கு வீடு எடுத்து குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அருண் வீட்டின் முன்பக்க கதவை உட்புறமாக தாழிட்டு முன்பக்க அறையில், அவருடைய மனைவி ரம்யா(32), மகள்கள் யாழினி(7), யாசினி(2) ஆகியோருடன் தூங்கிக்கொண்டிருந்தார். நள்ளிரவில் ரம்யா கழுத்தில் ஏதோ ஊர்வது போல் தோன்றியதால் திடுக்கிட்டு எழுந்தார். அப்போது யாரோ மர்ம நபர், அவருடைய கழுத்தில் கிடந்த தங்க சங்கிலி, குண்டுமணி உள்ளிட்ட 7 பவுன் நகைகளை பறிக்க முயன்றதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் சுதாரித்துக்கொண்ட ரம்யா திருடன்..., திருடன்... என்று கூச்சலிட் டார். சத்தம் கேட்டு எழுந்த அருண் சுதாரிப்பதற்குள், மர்மநபர் 7 பவுன் நகைகளை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டார். இது குறித்து அருண் செல்போன் மூலம் கொள்ளிடம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
நள்ளிரவில் வீட்டை நோட்டமிட்டு வந்த மர்ம நபர் முதலில் முன் பக்க கதவின் அருகே இருந்த ஜன்னல் கதவை திறந்தும், பின்னர் அதன் வழியாக கையை விட்டு உள்பக்கம் போடப்பட்டிருந்த தாழ்ப்பாளை திறந்தும் வீட்டுக்குள் புகுந்து இந்த கொள்ளையில் ஈடுபட்டது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நள்ளிரவில் வீடு புகுந்து துணிகர கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story