உணவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து நண்பரை கழுத்தை நெரித்து கொன்ற 2 பேர் கைது


உணவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து நண்பரை கழுத்தை நெரித்து கொன்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 22 Nov 2017 4:05 AM IST (Updated: 22 Nov 2017 4:05 AM IST)
t-max-icont-min-icon

உணவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து நண்பரை கழுத்தை நெரித்து கொலை செய்த 2 பேர் போலீசில் சிக்கினர்.

தானே,

உணவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து நண்பரை கழுத்தை நெரித்து கொலை செய்த 2 பேர் போலீசில் சிக்கினர். காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காணாமல் போனவர்

கல்யாண் கொல்சேவாடி பகுதியை சேர்ந்தவர் மயூர் (வயது21). இவர் கடந்த 8–ந்தேதி முதல் காணாமல் போய் விட்டார். இதனை தொடர்ந்து அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்து இருந்தனர்.

இந்த நிலையில் கடக்பாடா போலீசாருக்கு வாடவல்லி நெடுஞ்சாலை அருகே ஆண் நபரின் உடல் கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று உடலை மீட்டு விசாரணை நடத்தினர். இதில் பிணமாக மீட்கப்பட்டவர் காணாமல் போன மயூர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவரது செல்போனில் கடைசியாக பேசிய பெண் தோழியிடம் விசாரணை நடத்தினர்.

2 பேர் கைது

அப்போது மயூர் சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த கோகுல் பரதேசி, பிரமோத் ராஜ்புத் ஆகிய 2 பேரை சந்திக்க சென்றதாகவும், அதன் பின்னர் அவரை பார்க்கவில்லை என்று கூறினார்.

இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் தான் மயூரை தங்கள் வீட்டிற்கு அழைத்து சென்று உணவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து மயக்கமடைய செய்து, பின்னர் அவரது கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். ஆனால் இந்த கொலைக்கான காரணம் தெரியவரவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story