புது நோட்டாக மாற்றி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.1 கோடி பழைய நோட்டுகளை வாங்கி மோசடி


புது நோட்டாக மாற்றி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.1 கோடி பழைய நோட்டுகளை வாங்கி மோசடி
x
தினத்தந்தி 22 Nov 2017 4:07 AM IST (Updated: 22 Nov 2017 4:07 AM IST)
t-max-icont-min-icon

புதுநோட்டாக மாற்றி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.1 கோடி பழைய நோட்டுகளை வாங்கி மோசடியில் ஈடுபட்ட நவிமும்பை போலீஸ்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பை,

புதுநோட்டாக மாற்றி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.1 கோடி பழைய நோட்டுகளை வாங்கி மோசடியில் ஈடுபட்ட நவிமும்பை போலீஸ்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொள்ளை வழக்கில் மனைவி கைது

நவிமும்பை, கண்டேஷ்வர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வருபவர் போலீஸ்காரர் முகுந்த் மாசானே. இவரது மனைவி சமீபத்தில் நவிமும்பையில் உள்ள வெங்காய வியாபாரி ஒருவரின் வீட்டில் நடந்த ரூ.2 கோடி கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் போலீஸ்காரர் முகுந்த் மாசானே மீது பெண் ஒருவர் நவிமும்பை போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் கூறப்பட்டு இருப்பதாவது:–

ரூ.1 கோடி மோசடி

போலீஸ்காரர் முகுந்த் மாசானே கடந்த சில மாதங்களுக்கு முன் வங்கியில் புதிய நோட்டுகள் மாற்றி தருவதாக கூறி என்னிடம் இருந்து ரூ.1 கோடி பழைய செல்லாத ரூபாய் நோட்டுகளை வாங்கினார். ஆனால் அவர் சொன்னது போல ரூபாய் நோட்டை மாற்றி தராமல் ஏமாற்றிவிட்டார். மேலும் என்னிடம் வாங்கிய பழைய ரூபாய் நோட்டுகளையும் தராமல் மோசடி செய்துவிட்டார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டு இருந்தது.

இந்த புகார் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், போலீஸ்காரர் முகுந்த் மாசானேயை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story