ரஞ்சன்குடிக்காடு பகுதியில் மரங்கள் வெட்டி கடத்தல்; வனகாப்பாளர் உள்பட 2 பேர் கைது
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ரஞ்சன்குடிக்காடு பகுதியில் மரங்கள் வெட்டி கடத்திய வழக்கில் வன காப்பாளர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய வனச்சரகர் மற்றும் அ.தி.மு.க. பிரமுகர் உள்ளிட்டோரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
மங்களமேடு,
பெரம்பலூர் மாவட்டம் மங்களமேட்டை அடுத்துள்ள ரஞ்சன்குடிக்காடு வனப்பகுதியில் நாவல், வேம்பு, தேக்கு, மூங்கில், அரச மரம் மற்றும் அரிய மூலிகை மரங்கள் என பலவகையான மரங்கள் இருக்கின்றன. பெரம்பலூர் மாவட்ட வனத்துறையினர் கட்டுப்பாட்டின்கீழ் இந்த மரங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. மேலும் இந்த வனப்பகுதியை ஒட்டியவாறே உள்ள ரஞ்சன்குடி, வெண்பாவூர், பசும்பலூர் உள்ளிட்ட கிராமங்களில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
லாரிகளில் கொண்டு செல்லப்பட்ட மரங்கள்
இந்த நிலையில் ரஞ்சன்குடிக்காடு வனப்பகுதியிலிருந்து வெட்டப்பட்ட மரங்கள் லாரிகளில் வெளியே எடுத்து செல்லப்பட்டதை மக்கள் கண்டனர். அப்போது மரங்கள் எங்கு எடுத்து செல்லப்படுகின்றன? என்பது குறித்து அங்கிருந்த வனத்துறையை சேர்ந்தவர்களிடம் கேட்ட போது சரியான தகவல் இல்லை. பின்னர் வனப்பகுதியினுள் சென்று பார்த்த போது தான் பல அரிய மரங்கள் வெட்டப்பட்டு காடுகள் வெட்ட வெளியாக காட்சியளித்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கும், பெரம்பலூர் மாவட்ட வனத்துறைக்கும் பொதுமக்கள் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.
வனத்துறையை சேர்ந்த நபர்களுக்கும் தொடர்பு
இதையடுத்து பெரம்பலூர் மாவட்ட வன அலுவலர் (பொறுப்பு) மோகன்ராம் உள்பட வனத்துறை அதிகாரிகள் ரஞ்சன்குடிக்காடு வனப்பகுதிக்கு வந்து ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது வனத்துறையினருக்கு தெரியாமல் சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்பட்டு வெளியிடங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது முதல் கட்டமாக தெரிய வந்தது. இந்த மரங்களை பாதுகாக்கும் பணியில் இருந்த ரஞ்சன்குடிக்காடு வனச்சரகர் மோகன், வனகாப்பாளர் ஆணையப்பன் ஆகியோர் உதவியோடு தான் மரங்கள் கடத்தப்பட்டது அதிகாரிகள் விசாரணையில் தெரிய வந்தது. இதைதொடர்ந்து மோகன், ஆணையப்பன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
வனகாப்பாளர் உள்பட 2 பேர் கைது
மேலும் வெட்டி எடுத்து கொண்டு செல்லப்பட்ட மரங்களின் எண்ணிக்கை எவ்வளவு? தற்போது காட்டுப்பகுதியில் இருக்கும் மரங்களின் எண்ணிக்கை எவ்வளவு? என்பதை கண்டறியும் பணியில் திருச்சி, விழுப்புரம் மாவட்ட வனத்துறை பறக்கும் படையை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வனத்துறை அதிகாரிகள் விசாரணையில் ரஞ்சன்குடி கிராமத்தை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகரும் மரவியாபாரியுமான சுக்குரு என்கிற சுப்பிரமணியன் (வயது 58), மங்களமேடு கிராமத்தை சேர்ந்த குள்ளான் (60) ஆகியோர் மூலம் தான் வெட்டப்பட்ட மரங்கள் வெளியிடங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட தகவல் தெரிய வந்தது. மேலும் மரங்கள் வெட்டப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய வனகாப்பாளர் ஆணையப்பன் மற்றும் மரவியாபாரி குள்ளான் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே ரஞ்சன்குடிக்காடு வனச்சரகர் மோகன் மற்றும் சுப்பிரமணியன் ஆகியோர் தலைமறைவாகிவிட்டனர்.
பறிமுதல் செய்யப்பட்ட மரக்கட்டைகள் எங்கே?
ரஞ்சன்குடிக்காடு பகுதியில் வெட்டி எடுக்கப்பட்ட மரங்களின் மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கும் என வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் அந்த மரங்கள் எங்கு கொண்டு செல்லப்பட்டன? யாரிடம் விற்பனை செய்யப்பட்டது? எந்த வகையான பயன்பாட்டிற்காக இந்த மரங்கள் கடத்தப்பட்டன? என்பன உள்ளிட்டவை குறித்து பெரம்பலூர் வனத்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் தமிழகத்தில் உள்ள முக்கிய அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோருக்கும் தொடர்பு இருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஒருவரையும் விட்டு வைக்க மாட்டோம் என வனத்துறை அதிகாரி தெரிவித்தார். தற்போது பறிமுதல் செய்யப்பட்ட மரக்கட்டைகளின் எண்ணிக்கை மற்றும் எடையளவு உள்ளிட்ட விவரங்கள் மற்றும் எந்தெந்த பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன? என்பவை குறித்து வனத்துறையினர் தகவல் தெரிவிக்க மறுத்து விட்டனர். இந்த சம்பவம் பெரம்பலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story