காதலன் திருமணத்திற்கு மறுத்ததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை போலீஸ் விசாரணை
காதலன் திருமணத்திற்கு மறுத்ததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மும்பை,
காதலன் திருமணத்திற்கு மறுத்ததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதல்மும்பை சாக்கிநாக்காவை சேர்ந்தவர் அங்குஷ்(வயது49). இவரது மகள் பிரதிக்ஷா(22). தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.
பிரதிக்ஷாவும், வாலிபர் ஒருவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்கள்.
இந்தநிலையில், வாலிபரின் தாய்க்கு இவர்களது காதல் விவகாரம் தெரியவந்ததாகவும், காதலுக்கு அவர் எதிர்ப்பு தெரிவித்து பிரதிக்ஷாவை மறந்து விடும்படி மகனிடம் கூறியதாகவும் கூறப்படுகிறது.
தற்கொலைஇதன் காரணமாக அந்த வாலிபர் பிரதிக்ஷாவை திருமணம் செய்ய மறுத்து விட்டதாக தெரிகிறது. இதில், மனமுடைந்த பிரதிக்ஷா சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலைக்கு முன்னதாக அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில் காதலன் மற்றும் அவரது தாய் மீது குற்றச்சாட்டுகளை தெரிவித்து இருந்தார்.
போலீசார் சம்பவம் தொடர்பாக பிரதிக்ஷாவின் காதலன் மற்றும் அவரது தாய் இருவர் மீதும் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.