புதுவையில் தொடர்ந்து மழை; கடல் சீற்றத்தால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை


புதுவையில் தொடர்ந்து மழை; கடல் சீற்றத்தால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை
x
தினத்தந்தி 1 Dec 2017 4:00 AM IST (Updated: 1 Dec 2017 2:02 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. விட்டு விட்டு தொடர்ந்து பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

புதுச்சேரி,

புதுவையில் கடந்த 2 நாட்களாக இரவிலும், பகலிலும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. புயல் காரணமாக புதுவை கடல் சீற்றத்துடன் காணப்பட்டு வருகிறது. வழக்கத்துக்க மாறாக ராட்சத அலைகள் சீறிப்பாய்ந்தன. இதனால் கடற்கரையில் உருவாக்கப்பட்டு இருந்த செயற்கை மணல் பரப்பு அலையில் சிக்கி மூழ்கியது. வழக்கம்போல் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல் கடல் அலையில் விளையாடினர். அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

கடல் சீற்றம் காரணமாக ஏற்கனவே மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. நேற்றும் அவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகம் மற்றும் பாதுகாப்பான இடங்களில் படகுகளை நிறுத்தி வைத்து இருந்தனர்.

நேற்று அதிகாலை முதல் மாலை வரை இடைவெளி விட்டு தொடர்ந்து மழை பெய்தபடி இருந்தது. அதாவது சிறிது நேரம் மழை பெய்வது, பிறகு லேசான வெயில் அடிப்பது என இருந்தது. பள்ளிகளுக்கு மாணவ, மாணவிகள் நனைந்தபடியே சென்றனர்.

இரவிலும் இதேபோல் மழை விட்டு விட்டு பெய்தபடி இருந்தது. இதனால் வீடுகளுக்குள் பொதுமக்கள் முடங்கினர். இருசக்கர வாகனங்களிலும் நடந்தும் சென்றவர்கள் அவதிக்குள்ளானார்கள். இந்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மழைக்கு பல இடங்களில் சாலைகள் சேதமடைந்து பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் மழை தண்ணீர் தேங்கி நின்றது.


Next Story