கோவில்பட்டியில் மனைவியை கொலை செய்தவர் கைது
கோவில்பட்டியில் மனைவியை கொலை செய்தவர் கைது செய்யப்பட்டார்.
கோவில்பட்டி,
கோவில்பட்டியில் மனைவியை கொலை செய்தவர் கைது செய்யப்பட்டார்.
கொலைதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்திநகர் முத்துராமலிங்கம் தெருவைச் சேர்ந்தவர் இசக்கி(வயது 38). கட்டிட தொழிலாளியான இவருடைய மனைவி மகேசுவரி(35). இவர் கோவில்பட்டியில் உள்ள தனியார் குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
இசக்கி சரியாக வேலைக்கு செல்லாமல், மனைவியிடம் அடிக்கடி செலவுக்கு பணம் கேட்டு தகராறு செய்து வந்தார். நேற்று முன்தினம் காலையில் வீட்டில் இருந்து வேலைக்கு புறப்பட்டு சென்ற மனைவியிடம் இசக்கி பணம் கேட்டு தகராறு செய்தார். ஆனால் மகேசுவரி பணம் கொடுக்காமல் தெருவில் நடந்து சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த இசக்கி கத்தியால் மகேசுவரியின் முதுகில் சரமாரியாக குத்திக் கொலை செய்தார்.
கைதுஇதுகுறித்து கோவில்பட்டி மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். தலைமறைவாக இருந்த இசக்கியை போலீசார் கைது செய்தனர்.
கோவில்பட்டி 2–வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் காவலில் வைக்குமாறு மாஜிஸ்திரேட்டு வீரணன் உத்தரவிட்டார்.