திண்டுக்கல் வழியாக செல்லும் ஈரோடு, நாகர்கோவில் பாசஞ்சர் ரெயில்களின் நேரம் மாற்றம்


திண்டுக்கல் வழியாக செல்லும் ஈரோடு, நாகர்கோவில் பாசஞ்சர் ரெயில்களின் நேரம் மாற்றம்
x
தினத்தந்தி 1 Dec 2017 10:00 PM GMT (Updated: 1 Dec 2017 6:14 PM GMT)

சுரங்கப்பாதை பணி எதிரொலியாக திண்டுக்கல் வழியாக செல்லும் கோவை, ஈரோடு பாசஞ்சர் ரெயில்களின் நேரம் மாற்றப்பட்டு உள்ளது.

திண்டுக்கல்,

திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து பழனி, கரூர், திருச்சி, மதுரை ஆகிய பகுதி வழியாக 4 ரெயில் பாதைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதில், திண்டுக்கல்–கரூர் ரெயில் பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.

அதாவது, திண்டுக்கல் மாவட்டம் எரியோடு, பாளையம், கரூர் மாவட்டம் வெள்ளியணை ஆகிய ரெயில் நிலையங்களுக்கு இடையே இருக்கும் ஆளில்லா ரெயில்வே கேட் பகுதி மூடப்பட இருக்கிறது. அதற்கு பதிலாக எளிதான போக்குவரத்தை மேற்கொள்ள வசதியாக சுரங்கப்பாதைகள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது.

இதையொட்டி, இன்றும் (சனிக்கிழமை), வருகிற 9–ந்தேதியும் அந்த ரெயில் பாதையில் செல்லும் 2 பாசஞ்சர் ரெயில்களின் நேரம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

இது குறித்து திண்டுக்கல் ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:–

கோவையில் இருந்து நாகர்கோவில் செல்லும் பாசஞ்சர் ரெயில் தினமும் காலை 7.10 மணிக்கு கோவையில் இருந்து புறப்படுவது வழக்கம். ஆனால், சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடப்பதால், நாளைக்கு (அதாவது இன்று) அங்கிருந்து 2 மணி 10 நிமிடம் தாமதமாக 9.20 மணிக்கு புறப்படும். இதனால் இடையில் இருக்கும் ரெயில் நிலையங்களுக்கு வழக்கமான நேரத்தை விட அந்த ரெயில் தாமதமாக வரும்.

இதே போல, நெல்லை–ஈரோடு பாசஞ்சர் ரெயில் திண்டுக்கல் ரெயில் நிலையத்துக்கு காலை 11.15–க்கு வருவது வழக்கம். இங்கிருந்து 11.50 மணிக்கு ஈரோடு நோக்கி மீண்டும் புறப்படும். தற்போது இதில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, நாளைக்கு (இன்று) 1½ மணி நேரம் தாமதமாக, மதியம் 1.20 மணிக்கு திண்டுக்கல்லில் இருந்து அந்த ரெயில் புறப்படும். வருகிற சனிக்கிழமையும் இதே மாற்றத்தின்படி தான் 2 ரெயில்களும் செல்லும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story