சென்னை நகரில் வீடு ஒத்திக்கு விடுவதாக மோசடி: பெண் கைது


சென்னை நகரில் வீடு ஒத்திக்கு விடுவதாக மோசடி: பெண் கைது
x
தினத்தந்தி 3 Dec 2017 4:49 AM IST (Updated: 3 Dec 2017 4:49 AM IST)
t-max-icont-min-icon

சென்னை நகரில் வீடு ஒத்திக்கு விடுவதாக மோசடி: ரூ.14 லட்சத்தை ஏமாற்றிய பெண் கைது வாலிபரிடம் 10 பவுன் நகையை பறித்தார்.

பூந்தமல்லி,

சென்னை நகரில் வீடுகளை ஒத்திக்கு விடுவதாக கூறி நகை, பணத்தை பறித்து ஏமாற்றும் கும்பல் விருகம்பாக்கம் பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதைத்தொடர்ந்து விருகம்பாக்கம் போலீசார் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் விருகம்பாக்கத்தில் இந்த கும்பலை சேர்ந்த பெண் ஒருவர் குறிப்பிட்ட ஓட்டலில் தங்கி இருப்பதாக வந்த தகவலையடுத்து விருகம்பாக்கம் இன்ஸ்பெக்டர் வேலுமணி தலைமையில் விரைந்து சென்ற போலீசார் அந்த ஓட்டலுக்கு சென்று அங்கு தங்கி இருந்த பெண்ணை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில் பிடிபட்ட பெண் விருகம்பாக்கத்தை சேர்ந்த சசிபிரியா(வயது35), என்பதும் இவர் ராயப்பேட்டையில் உள்ள தனது மாமனார் வீட்டை ஒத்திக்கு விடுவதாக கூறி ஜெயஸ்ரீ என்ற பெண்ணிடம் ரூ.14 லட்சம் பணத்தை வாங்கி கொண்டு ஏமாற்றியதும், கொடுங்கையூரை சேர்ந்த சரவணன் என்பவரிடம் 10 பவுன் நகையை வாங்கி கொண்டு, அதனை அடகு வைத்து ஏமாற்றியதும் தெரியவந்தது.

இதையடுத்து சசிபிரியாவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 9 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story