கள்ளக்காதல் விவகாரத்தில் பயங்கரம்: சாயப்பட்டறை தொழிலாளி கழுத்தை அறுத்து கொலை
குமாரபாளையம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் சாயப்பட்டறை தொழிலாளி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தந்தை-மகனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குமாரபாளையம்,
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள கோட்டைமேடு தவடப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் கன்னியப்பன் (வயது 42). தறிப்பட்டறை தொழிலாளி. இவரது மனைவி மரகதம் (38). இவர்களுக்கு சங்கர் (20) என்ற மகனும், மீனா என்ற மகளும் உள்ளனர். மீனாவுக்கு திருமணம் ஆகிவிட்டது.
அதே பகுதியில் கன்னியப்பனின் சித்தப்பா மகன் ஆறுமுகம் (34) வசித்து வந்தார். சாயப்பட்டறை தொழிலாளியான இவருக்கு நாகம்மாள் (34) என்ற மனைவியும், மஞ்சுளா தேவி (16), மாசிலாமணி (15) என்ற 2 மகள்களும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக கன்னியப்பன் மனைவி மரகதத்திற்கும், ஆறுமுகத்திற்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்தது.
இது கன்னியப்பனுக்கு தெரியவரவே அவர் இருவரையும் கண்டித்து உள்ளார். இருப்பினும் இருவரும் கள்ளக்காதலை கைவிட மறுத்து தொடர்ந்து உள்ளனர். இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி மரகதமும், ஆறுமுகமும் உல்லாசமாக இருந்ததை கன்னியப்பன் நேரில் பார்த்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கன்னியப்பன் ஆறுமுகத்தை கொலை செய்ய திட்டமிட்டார்.
அதன்படி நேற்று காலை அப்பகுதியில் ஒதுக்குபுறமாக சென்ற ஆறுமுகத்தை அங்கு மறைந்து இருந்த கன்னியப்பன், அவரது மகன் சங்கர் ஆகியோர் சேர்ந்து இரும்பு கம்பியால் தாக்கியும், கழுத்தை அறுத்தும் கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிவிட்டனர்.
இந்த கொலை குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற குமாரபாளையம் போலீசார், ஆறுமுகத்தின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே கன்னியப்பன், அவரது மகன் சங்கர் ஆகிய இருவரும் குமாரபாளையம் அக்ரஹாரம் கிராம நிர்வாக அலுவலர் முருகன் முன்னிலையில் சரண் அடைந்தனர். அவர் இருவரையும் குமாரபாளையம் போலீசாரிடம் ஒப்படைத்தார். இதையடுத்து கன்னியப்பன், சங்கர் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்காதலை கைவிட மறுத்த சாயப்பட்டறை தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story