கன்னியாகுமரி மாவட்டத்தில் புயலில் சிக்கிய மீனவர்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
ன்னியாகுமரி மாவட்டத்தில் புயலில் சிக்கிய மீனவர்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தூத்துக்குடி,
கன்னியாகுமரி மாவட்டத்தில் புயலில் சிக்கிய மீனவர்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆலோசனை கூட்டம்தூத்துக்குடி ஒருங்கிணைந்த மாவட்ட அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு வடக்கு மாவட்ட செயலாளர் வில்சன், தெற்கு மாவட்ட செயலாளர் தயாளன் ஆகியோர் தலைமை தாங்கினர். சிறப்பு அழைப்பாளராக மாநில துணை பொதுச் செயலாளர் சுந்தர் கலந்து கொண்டு பேசினார்.
தீர்மானங்கள்கூட்டத்தில் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்களை மீட்பதில் மத்திய, மாநில அரசின் அலட்சிய போக்கை கண்டிப்பது, மீனவர்களை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு உடனடியாக அடிப்படை தேவைகளை செய்து கொடுக்க வேண்டும், வைப்பாற்றில் எந்தவித அனுமதியும் இல்லாமல் மணல் அள்ளப்படுகிறது. உடனடியாக மணல் திருட்டை தடுத்து நிறுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
யார்–யார்?கூட்டத்தில் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் குரூஸ் திவாகர், தெற்கு மாவட்ட அவைத்தலைவர் ஜெயகோபால், வடக்கு மாவட்ட அவைத்தலைவர் பாஸ்கர், தெற்கு மாவட்ட துணை செயலாளர் மலர்விழி, வடக்கு மாவட்ட தொண்டர் அணி செயலாளர் செல்வா உள்பட பலர் கலந்து கொண்டனர்.