டி.வி. தொடர்களில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி 5 பெண்களிடம் பணமோசடி செய்த டி.வி. நடிகர் கைது


டி.வி. தொடர்களில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி  5 பெண்களிடம் பணமோசடி செய்த டி.வி. நடிகர் கைது
x
தினத்தந்தி 9 Dec 2017 3:39 AM IST (Updated: 9 Dec 2017 3:38 AM IST)
t-max-icont-min-icon

டி.வி. தொடர்களில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி 5 பெண்களிடம் பணமோசடி செய்த டி.வி. நடிகரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

டி.வி. தொடர்களில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி 5 பெண்களிடம் பணமோசடி செய்த டி.வி. நடிகரை போலீசார் கைது செய்தனர்.

டி.வி. நடிகர்

மும்பையை சேர்ந்த டி.வி. நடிகர் மாகுல்வாகலே. இவருக்கு சமீபத்தில் முகையாகர்வா என்ற இளம்பெண்ணுடன் அறிமுகம் ஏற்பட்டது. அப்போது, அந்த இளம்பெண்ணிடம் டி.வி. தொடர்களில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதற்கான நடவடிக்கைகளை செய்வதாக கூறி, மாகுல்வாகலே அந்த இளம்பெண்ணிடம் இருந்து ரூ.1 லட்சம் வரை பணம் வாங்கியதாக கூறப்படுகிறது.

ஆனால் அவர் கூறியபடி டி.வி. தொடர்களில் நடிக்க வாய்ப்பு வாங்கி கொடுக்கவில்லை. இதனால் தான் ஏமாற்றப்படுவதை உணர்ந்த இளம்பெண், கொடுத்த பணத்தை அவரிடம் திருப்பிக்கேட்டுள்ளார்.

கைது

ஆனால் நடிகர் மாகுல்வாகலே பணத்தை திருப்பி கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் மனம் வெறுத்துப்போன இதுபற்றி இளம்பெண் மலாடு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, டி.வி. நடிகர் மாகுல்வாகலேவை அதிரடியாக கைது செய்தனர். விசாரணையின் போது, அவர் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி மொத்தம் 5 பெண்களிடம் இதே பாணியில் பணமோசடி செய்திருப்பது தெரியவந்தது.

இந்த மோசடி தொடர்பாக போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story