பாலியல் பலாத்காரம் செய்து சிறுமி கொலை; வாலிபர் கைது
வடமதுரை அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வடமதுரை,
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையை அடுத்த கொம்பேறிபட்டி பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் படித்து வந்தாள். இந்த நிலையில் நேற்று அவளுடைய தாயார் கோவிலுக்கு சென்று விட்டார். இதனால் சிறுமியை அங்கன்வாடி மையத்துக்கு அனுப்புவதற்காக அவருடைய பாட்டி வீட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு உறவினருக்கு வீட்டுக்கு மொபட்டில் வந்த அய்யலூர் அருகேயுள்ள குப்பாம்பட்டியை சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் ராஜ்குமார் (19) என்பவரிடம் சிறுமியை அங்கன்வாடி மையத்துக்கு அழைத்து செல்லும்படி அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில் அங்கன்வாடி மையத்தில் இருந்து மாலையில் சிறுமி வீட்டுக்கு வரவில்லை. இதையடுத்து பொதுமக்களும், உறவினர்களும் சிறுமியை தேடினர். இதையடுத்து சிறுமியை அழைத்து சென்ற ராஜ்குமாரை கல்பட்டிசத்திரம் அருகேயுள்ள புதுவாடி பகுதியில் பொதுமக்கள் பிடித்தனர். இதுகுறித்து வடமதுரை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு விரைந்து வந்து ராஜ்குமாரிடம் விசாரணை நடத்தினர். அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
சிறுமியை அங்கன்வாடி மையத்துக்கு அழைத்து செல்லாமல் அய்யலூர் கிணத்துப்பட்டி அருகேயுள்ள சியான்கேணி என்னும் மலைப்பகுதிக்கு ராஜ்குமார் அழைத்து சென்றுள்ளார். பின்னர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து தெரியவந்தது. மேலும் சிறுமி அணிந்து இருந்த வெள்ளி கொலுசு, வளையல் ஆகியவற்றை திருடிவிட்டு, அவளது உடலை அந்த பகுதியில் கற்களை வைத்து மறைத்து சென்று இருப்பதும் தெரியவந்தது. உடனே போலீசார் அங்கு சென்று சிறுமியின் உடலை கைப்பற்றினர்.
இதற்கிடையே சிறுமியை கொலை செய்தவரை சம்பவ இடத்துக்கு அழைத்து வரும்படி உறவினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சிவக்குமார், வடமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன் மற்றும் போலீசார் அவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் சமாதானம் அடையாத அய்யலூர் கடவூர் பிரிவு அருகே திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அவர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக் கப்பட்டது.
உடனே போலீசார் அங்கு சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து மறியலை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர். பின்னர் சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பினர். இதுகுறித்து வடமதுரை போலீசார் ராஜ்குமாரை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜ்குமார் மீது வடமதுரை போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே பல திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, கைதாகி சேலம் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் தண்டனையில் இருந்தார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு விடுதலையாகி தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story