வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியை செய்ய மறுத்த 63 ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு
வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியை செய்ய மறுத்த 63 ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தானே,
இந்த உத்தரவை கல்யாண் தாசில்தார் பிறப்பித்து இருந்தார். ஆனால் அரசு நிர்வாகத்தின் இந்த உத்தரவை மீறி கல்யாண்– டோம்பிவிலி மாநகராட்சியை சேர்ந்த 63 ஆசிரியர்கள் இந்த பணியை செய்யாமல் புறக்கணித்தனர்.
இதையடுத்து அந்த ஆசிரியர்கள் மீது மாநகராட்சி தேர்தல் அதிகாரிகள் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார், அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில் 63 ஆசிரியர்கள் மீது 2 தனித்தனி வழக்குகளை பதிவு செய்து உள்ளனர்.தேர்தல் அதிகாரிகளின் இந்த நடவடிக்கையை எதிர்த்து ஆசிரியர் கூட்டமைப்பினர் கோர்ட்டிற்கு செல்வார்கள் என கூறப்படுகிறது.
Related Tags :
Next Story