கண்டிகை அருகே வீடுகளின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை திருட்டு


கண்டிகை அருகே வீடுகளின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 17 Dec 2017 10:45 PM GMT (Updated: 17 Dec 2017 10:18 PM GMT)

கண்டிகை அருகே வீடுகளின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை திருடப்பட்டது.

திருப்போரூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் கண்டிகையை அடுத்த நல்லம்பாக்கம் கிராமத்தில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு 600–க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வந்த ஹரிஹரசுதன், ராதாகிருஷ்ணன், சுசீந்திரன், பாகம் பிரியாள் ஆகியோர் தங்கள் வீடுகளை பூட்டி விட்டு சொந்த ஊருக்கு சென்று விட்டனர். நேற்று மாலை அவர்களுடைய வீடுகளின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்ட அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து அவர்கள் வீடுகளின் உரிமையாளர்களான ஹரிஹரசுதன், ராதாகிருஷ்ணன், சுசீந்திரன், பாகம் பிரியாளுக்கு தகவல் தெரிவித்தனர்.

தாழம்பூர் போலீசிலும் புகார் செய்யப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் அவர்களுடைய வீட்டில் இருந்து மொத்தம் 20 பவுன் நகை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. வீடுகளின் உரிமையாளர்கள் வந்த பின்னரே எவ்வளவு நகை திருடப்பட்டுள்ளது என்பது தெரியவரும். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


Next Story