ஒகி புயலில் மாயமான மீனவர்களை மீட்கக்கோரி கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்


ஒகி புயலில் மாயமான மீனவர்களை மீட்கக்கோரி கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 Dec 2017 4:15 AM IST (Updated: 19 Dec 2017 2:50 AM IST)
t-max-icont-min-icon

ஒகி புயலில் மாயமான மீனவர்களை மீட்கக்கோரி கல்லூரி மாணவர்கள், வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மன்னார்குடி,

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கன்னியாகுமரி மற்றும் கேரள பகுதிகளில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள். சமீபத்தில் தாக்கிய ஒகி புயல் காரணமாக கன்னியாகுமரி மற்றும் கேரள பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் படகுகளுடன் மாயமானார்கள். இவர்களை மீட்பதற்கு மத்திய, மாநில அரசுகள் அலட்சியம் காட்டி வருவதை கண்டித்தும், மாயமான மீனவர்களை விரைந்து மீட்க வேண்டும் என வலியுறுத்தியும் மன்னார்குடியில் உள்ள ராஜகோபாலசாமி அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

வகுப்பு புறக்கணிப்பு

ஆர்ப்பாட்டத்தையொட்டி மாணவ-மாணவிகள் நேற்று வகுப்புகளை புறக்கணித்தனர்.


Next Story