‘ஒகி’ புயலுக்கு பின் கடலுக்கு சென்று மாயமான 3 பேரை மீட்க கோரி மீனவர்கள் வேலைநிறுத்தம்
‘ஒகி’ புயலுக்கு பின்பு கடலுக்கு சென்று மாயமான 3 மீனவர்களை மீட்கக்கோரி குளச்சல் மீனவர்கள் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
குளச்சல்,
‘ஒகி’ புயலால் குமரி மாவட்டம் பெருத்த சேதத்தை சந்தித்துள்ளது. கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நூற்றுக்கணக்கான மீனவர்கள் புயலில் சிக்கி மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணி தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் புயலுக்கு பின்பு கடந்த 17–ந் தேதி குளச்சல் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அதில் 3 பேர் மாயமாகி இருப்பது குமரி மாவட்ட மீனவர்களிடையே மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அது பற்றிய விவரம் வருமாறு:–
குளச்சல் பகுதியை சேர்ந்த சகோரியா பிச்சை (வயது 53), சிம்சன் ஜோஸ் (39), அந்தோணி அடிமை (60) ஆகிய 3 பேரும் கடந்த 17–ந்தேதி பைபர் படகில் மீன்பிடிக்க சென்றுள்ளனர். அதன்பின்னர், அவர்கள் கரைதிரும்பவில்லை.
இதனால் 3 பேரின் உறவினர்களும் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதற்கிடையே குளச்சல் காணிக்கை மாதா ஆலய பங்குத்தந்தை எட்வின் தலைமையில் நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
இதில் ஊர் நிர்வாகிகள், விசைப்படகு சங்கத்தினர், துறைமுக வியாபாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். மாயமான 3 மீனவர்களையும் ஹெலிகாப்டர் மூலம் தேடி கண்டுபிடிக்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்தனர்.
அதன்படி நேற்று குளச்சல் மீனவர்கள் அனைவரும் ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் குளச்சல் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
போராட்டம் காரணமாக விசைப்படகுகள் அனைத்தும் குளச்சல் துறைமுகப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. மேலும், மீன் சந்தையும் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் மீன்கள் வாங்க வந்த கேரள வியாபாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Related Tags :
Next Story