வசாயில் ரெயில் சக்கரத்தில் சிக்கி போலீஸ்காரர் சாவு ஓடும் ரெயிலில் இருந்து இறங்கியபோது பரிதாபம்


வசாயில் ரெயில் சக்கரத்தில் சிக்கி போலீஸ்காரர் சாவு ஓடும் ரெயிலில் இருந்து இறங்கியபோது பரிதாபம்
x
தினத்தந்தி 21 Dec 2017 3:45 AM IST (Updated: 21 Dec 2017 3:41 AM IST)
t-max-icont-min-icon

வசாயில், ஓடும் ரெயிலில் இருந்து இறங்கிய போலீஸ்காரர் ரெயில் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

வசாய்,

வசாயில், ஓடும் ரெயிலில் இருந்து இறங்கிய போலீஸ்காரர் ரெயில் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீஸ்காரர்

மும்பையில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தவர் ஜெய்பிரகாஷ். இவர் தனது சகோதரர் மற்றும் உறவினர்களுடன் ரத்னகிரி மாவட்டம் தேவ்காட்டிற்கு சென்றார். பின்னர் அங்கிருந்து கொச்சுவேலி– பிகானீர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் உறவினர்களுடன் மும்பை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

நேற்றுமுன்தினம் இரவு அந்த ரெயில் வசாய் ரெயில் நிலையம் வந்தபோது, போரிவிலி செல்லும் கடைசி மின்சார ரெயில் நிற்பதை ஜெய்பிரகாஷ் கவனித்தார். இதனையடுத்து அந்த ரெயிலில் ஏறி மும்பை வர முடிவு செய்த அவர், மெதுவாக சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து கீழே இறங்கினார்.

சக்கரத்தில் சிக்கி சாவு

இதில், துரதிருஷ்டவசமாக கால் தவறி கீழே விழுந்த அவர் ரெயில் சக்கரத்தில் சிக்கினார். இதில் உடல் சிதைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். இது தெரியாமல் அவரது சகோதரர் மற்றும் உறவினர்கள் வீட்டிற்கு வந்துவிட்டனர். அங்கு வந்த பின்னர் தான் ஜெய்பிரகாஷ் ரெயிலில் சிக்கி பலியானது தெரியவந்தது.

இதனால் பதறி அடித்துக்கொண்டு அவர்கள் வசாய் ரெயில் நிலையத்திற்கு ஓடிவந்தனர். இதற்கிடையே ஜெய்பிரகாஷின் உடலை ரெயில்வே போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story