நகைக்கடையின் பின்பக்க கதவை உடைத்து ரூ.6½ லட்சம் நகைகள் கொள்ளை மர்மஆசாமிகளுக்கு போலீஸ் வலைவீச்சு
நகைக்கடையின் பன்பக்க கதவை உடைத்து ரூ.6½ லட்சம் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்
மும்பை,
நகைக்கடையின் பன்பக்க கதவை உடைத்து ரூ.6½ லட்சம் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
நகைகள் மாயம்மும்பை மஜ்காவ் சேத்மோதிஷா லேன் பகுதியில் ருப்ராம் பிரஜாபதி (வயது53) என்பவருக்கு சொந்தமான நகைக்கடை உள்ளது. சம்பவத்தன்று காலை இவர் வழக்கம்போல் கடையை திறந்து உள்ளே சென்றார். அப்போது, கடையில் இருந்த நகைகள் காணாமல் போயிருந்தன.
இதை பார்த்து அவர் அதிர்ச்சியில் உறைந்தார். மேலும் கடையின் பின்பக்க கதவும் உடைக்கப்பட்டு இருந்தது.
போலீஸ் வலைவீச்சுஇரவு நேரத்தில் நகைக்கடையின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்மஆசாமிகள் நகைகளை கொள்ளையடித்து சென்றிருந்தது தெரியவந்தது. கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.6 லட்சத்து 51 ஆயிரம் ஆகும். இந்த சம்பவம் குறித்து ருப்ராம் பிரஜாபதி போலீசில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்துச்சென்ற மர்மஆசாமிகளை வலைவீசி தேடிவருகின்றனர்.