மும்பை– கோவா இடையே 12 சிறப்பு ரெயில்கள் இயக்கம் மத்திய ரெயில்வே அறிவிப்பு


மும்பை– கோவா இடையே 12 சிறப்பு ரெயில்கள் இயக்கம் மத்திய ரெயில்வே அறிவிப்பு
x
தினத்தந்தி 23 Dec 2017 3:30 AM IST (Updated: 23 Dec 2017 2:55 AM IST)
t-max-icont-min-icon

மும்பை கோவா இடையே 12 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக மத்திய ரெயில்வே அறிவித்து உள்ளது.

மும்பை,

மும்பை கோவா இடையே 12 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக மத்திய ரெயில்வே அறிவித்து உள்ளது.

சிறப்பு ரெயில்கள்...

குளிர்காலத்தை முன்னிட்டு மும்பை– கோவா இடையே 12 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. இது குறித்து மத்திய ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–

இம்மாதம் 23, 25, 28, 30–ந்தேதி மற்றும் அடுத்த மாதம் 1, 4 ஆகிய தேதிகளில் அதிகாலை 5.33 மணிக்கு மும்பை லோக்மான்ய திலக்(எல்.டி.டி.) டெர்மினசில் இருந்து புறப்படும் சிறப்பு ரெயில்(வண்டி எண்: 01085) அன்று மாலை 5.30 மணிக்கு கோவா மாநிலம் மட்காவ் சென்றடையும்.

நின்று செல்லும் இடங்கள்

இதேபோல இம்மாதம் 24, 26, 29, 31 மற்றும் அடுத்த மாதம் 2, 5–ந்தேதிகளில் காலை 6 மணிக்கு கோவா மாநிலம் மட்காவில் இருந்து புறப்படும் சிறப்பு ரெயில் (01086) அன்று மாலை 5.10 மணிக்கு லோக்மான்ய திலக் டெர்மினஸ் வந்தடையும்.

இந்த ரெயில்கள் தானே, பன்வெல், ரோகா, கேட், சிப்லுன், ரத்னகிரி, கன்காவ்லி, சாவந்த்வாடி, திவிம் மற்றும் கர்மாலி ஆகிய இடங்களில் நின்று செல்லும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story