திருச்செந்தூரில் மது விற்ற 2 பேர் கைது; 61 மது பாட்டில்கள் பறிமுதல்


திருச்செந்தூரில் மது விற்ற 2 பேர் கைது; 61 மது பாட்டில்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 1 Jan 2018 3:45 AM IST (Updated: 1 Jan 2018 3:55 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் பகுதியில் மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 61 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் திருச்செந்தூர் டி.பி. ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் காயல்பட்டினம் பூந்தோட்டத்தை சேர்ந்த கணபதி மகன் பாலகிருஷ்ணன்(வயது 46), காயல்பட்டினம் மன்னர் ராஜாகோவில் தெருவை சேர்ந்த கணேசன் மகன் இசக்கிமுத்து (37) என்பதும், அவர்கள் இருவரும் டாஸ்மாக் மது பாட்டில்களை வாங்கி அதிக விலைக்கு வெளியில் விற்பனை செய்வதற்காக கொண்டு சென்றதும் தெரிய வந்தது.

2 பேர் கைது; 61 பாட்டில்கள் பறிமுதல்

இதனையடுத்து போலீசார் அவர்கள் இருவர் மீதும் வழக் குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 61 மது பாட்டில்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.


Next Story