மின்சார ரெயில் மோதி கல்லூரி மாணவர் பலி


மின்சார ரெயில் மோதி கல்லூரி மாணவர் பலி
x
தினத்தந்தி 3 Jan 2018 4:00 AM IST (Updated: 3 Jan 2018 12:23 AM IST)
t-max-icont-min-icon

மீனம்பாக்கம் அருகே மின்சார ரெயில் மோதியதில் கல்லூரி மாணவர் பலியானார்.

தாம்பரம்,

சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்தவர் விஜய். இவருடைய மகன் சந்தோஷ் (வயது 17). இவர் மீனம்பாக்கம் ரெயில்நிலையம் அருகில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.ஏ. பொருளாதாரம் படித்து வந்தார்.

இவர் நேற்று காலை வழக்கம் போல் வீட்டில் இருந்து கல்லூரிக்கு புறப்பட்டார். மீனம்பாக்கம் ரெயில் நிலையம் வந்த அவர், செல்போனில் பேசியபடியே ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்றார்.




























































































































































































































அப்போது காஞ்சீபுரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி சென்ற விரைவு மின்சார ரெயில், மாணவர் சந்தோஷ் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிர் இழந்தார்.

சம்பவம் குறித்து தாம்பரம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற ரெயில்வே போலீசார் மாணவர் சந்தோஷ் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதே போல் குரோம்பேட்டை ராதா நகர் பிரதானசாலை அருகே நேற்று காலை 6.30 மணியளவில் ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயற்சித்த 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மீது தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கிச்சென்ற மின்சார ரெயில் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற தாம்பரம் ரெயில்வே போலீசார் அவருடைய உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இறந்த நபர் நீலநிற முழுக்கை சட்டை மற்றும் சிகப்பு நிற லுங்கி அணிந்திருந்தார்.

அவர் அப்பகுதியில் தினமும் டைல்ஸ் ஓட்டும் வேலை செய்வதற்காக வந்து செல்வார் என அக்கம் பக்கத்தினர் தெரிவித்ததாகவும், இதுதவிர அவரை பற்றி வேறு எந்த தகவலும் தெரியவரவில்லை எனவும் போலீசார் கூறினர்.

2 சம்பவங்கள் குறித்தும் தாம்பரம் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story