யானை தாக்கி மூதாட்டி படுகாயம்


யானை தாக்கி மூதாட்டி படுகாயம்
x
தினத்தந்தி 3 Jan 2018 4:15 AM IST (Updated: 3 Jan 2018 12:37 AM IST)
t-max-icont-min-icon

தேன்கனிக்கோட்டை அருகே யானை தாக்கி மூதாட்டி படுகாயம் அடைந்தார்.

தேன்கனிக்கோட்டை,

தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ஆலள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பா. இவரது மனைவி சின்னதாயம்மா (வயது 60). இவர் நேற்று தன்னுடைய விவசாய நிலத்தில் அவரைக்காய் அறுவடை செய்து கொண்டிருந்தார்.

அப்போது அப்பகுதிக்கு காட்டு யானை ஒன்று வந்தது. இதை பார்த்த சின்னதாயம்மா அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் யானை விடாமல் அவரை துரத்தி தாக்கி, துதிக்கையால் தூக்கி வீசியது. இதில் சின்னதாயம்மா படுகாயம் அடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்ததும் தேன்கனிக்கோட்டை வனச்சரகர் ஆறுமுகம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து, படுகாயம் அடைந்த சின்ன தாயம்மாவை சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

தகவல் தெரிவியுங்கள்

ஆலள்ளி சுற்று வட்டார பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் உள்ளது.

எனவே பொதுமக்கள் யாரும் மாலை மற்றும் இரவு நேரங்களில் வனப்பகுதியையொட்டி வர வேண்டாம். மேலும் யானைகளின் நடமாட்டம் குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினர். 

Next Story