சங்கரன்கோவில் அருகே 35 பவுன் நகை கொள்ளை வழக்கில் 9 பேர் கைது 7 பவுன் நகைகள் மீட்பு
சங்கரன்கோவில் அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 35 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
சங்கரன்கோவில்,
சங்கரன்கோவில் அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 35 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 7 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.
35 பவுன் நகைகள் கொள்ளைநெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள என்.ஜி.ஓ காலணியை அடுத்த கணபதிநகரை சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 41). இவர் கடந்த 2016–ம் ஆண்டு டிசம்பர் மாதம் குடும்பத்தினருடன் வெளியூருக்கு சென்றபோது, வீட்டின் பூட்டை திறந்து பீரோவை உடைத்து பீரோவில் இருந்த 35 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
இதுதொடர்பாக சங்கரன்கோவில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
7 பவுன் நகைகள் மீட்புவிசாரணையில், சங்கரன்கோவில் அம்பேத்கர் நகர் மற்றும் கக்கன் நகரை சேர்ந்த குமார் மகன் நாகராஜ்(25), குருசாமி மகன் மகி(எ)மகேந்திரன்(19), யோவான் மகன் முத்துக்குமார்(17), மாரிச்சாமி மகன் சிவா(16), குட்டிதுரை மகன் பால்மணி(21), சுப்புராஜ் மகன் கார்த்தி(28), சவரிமுத்து மகன் அஜித்(20), பவுல் மகன் ஜோசப் சேவியர்(43), முப்பிடாதி மகன் ராஜா(17) ஆகியோர் கொள்ளையடித்தது தெரியவந்தது. இதுதொடர்பாக சங்கரன்கோவில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து 9 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து 7 பவுன் நகைகளை மீட்டனர்.