ஹஜ் புனித யாத்திரைக்கு மானியத்த மத்திய அரசு ரத்து செய்தது கண்டனத்துக்குரியது வைகோ குற்றச்சாட்டு


ஹஜ் புனித யாத்திரைக்கு மானியத்த மத்திய அரசு ரத்து செய்தது கண்டனத்துக்குரியது வைகோ குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 18 Jan 2018 4:00 AM IST (Updated: 18 Jan 2018 1:33 AM IST)
t-max-icont-min-icon

ஹஜ் புனித யாத்திரைக்கு மானியத்தை மத்திய அரசு ரத்து செய்தது கண்டனத்துக்குரியது என்று திருவாரூரில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

திருவாரூர்,

இஸ்லாமியர்கள் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாக ஹஜ் புனித யாத்திரையை கருதுகின்றனர். தங்களது வாழ்நாளில் ஒரு முறையாவது சவூதி-அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு புனித யாத்திரை சென்று வருகின்றனர். இந்த புனித யாத்திரைக்காக மத்திய அரசு ஆண்டுதோறும் மானியம் அளித்து வந்தது. இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சாசன அமர்வு ஹஜ் பயணத்திற்கான மானியத்தை நிறுத்த உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து இந்த ஆண்டு ஹஜ் மானியத்தை முழுமையாக ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்தது. இது குறித்து திருவாரூர் வந்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில்,

ஹஜ் புனித யாத்திரைக்கு வழங்கப்படும் மானியத்தை மத்திய அரசு ரத்து செய்திருப்பது கண்டனத்துக்குரியது. மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு மதசார்பின்மையை தகர்த்தெறிந்து சன்பரிவார் அமைப்பினருக்கு ஆதரவாக செயல்படுகிறது என குற்றம் சாட்டினார். 

Next Story