பறிமுதல் செய்யப்பட்ட மதுவை ஆய்வுக்கு அனுப்ப முடிவு 2 பேருக்கு வலைவீச்சு


பறிமுதல் செய்யப்பட்ட மதுவை ஆய்வுக்கு அனுப்ப முடிவு 2 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 21 Jan 2018 3:45 AM IST (Updated: 21 Jan 2018 2:26 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அருகே பறிமுதல் செய்யப்பட்ட மதுவை ஆய்வுக்கு அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் அருகேயுள்ள அணைப்பட்டியில் ஒரு வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து திண்டுக்கல் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பேபி தலைமையிலான போலீசார் விரைந்து சென்று சோதனை செய்தனர். அப்போது ரமேஷ்குமார் என்பவரின் வீட்டில் 17 பெட்டிகளில் இருந்த 801 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேஷ்குமார், ஆத்தூர் விட்டல்பாறையை சேர்ந்த ராமர், அவருடைய மனைவி செவ்வந்தி ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில், ராஜபாளையத்தை சேர்ந்த 2 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதற்கிடையே பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களில் போலி முத்திரை இருந்தது.

இதனால் பாட்டில்களில் இருந்தது வெளிமாநில மதுவாகவோ அல்லது போலி மதுவாகவோ இருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே, பறிமுதல் செய்யப்பட்ட மதுவை, மதுரைக்கு ஆய்வுக்காக அனுப்ப மதுவிலக்கு போலீசார் முடிவு செய்துள்ளனர். ஆய்வுக்கு பின்னரே போலி மதுவா? என்பது தெரியவரும்.

மேலும் ராஜபாளையத்தை சேர்ந்த 2 பேரையும் பிடிக்க கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் மேற்பார்வையிலான தனிப்படை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த 2 பேரையும் கைது செய்தால் போலி முத்திரை எங்கு கிடைத்தது? இதில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்ற விவரம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.


Next Story