விருத்தாசலத்தில் ரெயில்வே ஊழியர்கள் போராட்டம்


விருத்தாசலத்தில் ரெயில்வே ஊழியர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 31 Jan 2018 3:00 AM IST (Updated: 31 Jan 2018 2:18 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலம் ரெயில் நிலையத்தில் எஸ்.ஆர்.எம்.யு தொழிற்சங்கத்தினர் நேற்று பல்வேறு கோரி‘கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

விருத்தாசலம்,

விருத்தாசலம் ரெயில் நிலையத்தில் எஸ்.ஆர்.எம்.யு தொழிற்சங்கத்தினர் நேற்று பல்வேறு கோரி‘கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். ஆர்பாட்டத்திற்கு கோட்ட செயலாளர் பழனிவேல் தலைமை தாங்கினார். கிளை தலைவர் செல்வம் முன்னிலை வகித்தார். வீரகுமார், கணேஷ்குமார், சிலம்பரசன், மகாலட்சுமி, ராஜேந்திரன், தீபலட்சுமி, ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதில் புதிய பென்‌ஷன் திட்டத்தை உறுதி செய்யப்பட்ட பென்‌ஷன் திட்டமாக மாற்றி அமைக்க வேண்டும். தரத்திற்கு ஏற்ற பதவி உயர்வு வழங்க வேண்டும். டீசல் எலக்ட்ரிக்கல் ஷெட்களை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது, அனைத்து பணியாளர்களுக்கும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம் நடந்தது.


Next Story