தஞ்சையில் ரெயில்வே நிர்வாகம் கோவில்களை இடிக்க எதிர்ப்பு
தஞ்சையில் ரெயில்வே நிர்வாகம் கோவில்களை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
தஞ்சாவூர்,
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் அண்ணாதுரை தலைமையில் நடந்தது. இதில் தஞ்சை மாவட்ட ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் மாயன் தலைமையில் பொதுமக்கள் 15-க்கும் மேற்பட்டவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை மாவட்ட வணிகவரித்துறை அலுவலகத்திற்கு எதிரே மழைநீர் வடிகால் வாரி பகுதியில் அருந்ததியர்களாகிய நாங்கள் குடியிருந்து வந்தோம். இந்த பகுதி ஆலமரத்தெரு என அழைக்கப்பட்டது. அங்கிருந்தபடி எங்கள் முன்னோர்கள் ரெயில்வேயில் துப்புரவு பணிகளை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் ரெயில்வேயின் வளர்ச்சிக்காக அந்த இடம் தேவைப்படுவதாக எங்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். எங்களுக்கு மாற்று இடமாக மானோஜிப்பட்டி அம்பேத்கர் நகரில் இடம் கொடுத்தனர்.
நாங்கள் வசித்த ரெயில்வே காலனி ஆலமரத்தெரு பகுதியில் எங்கள் குலதெய்வங்களான மதுரைவீரன், மாரியம்மன் கோவில் உள்ளது. அந்த இடத்தை விட்டு நாங்கள் வந்து விட்டாலும் கோவில்களில் வழிபாட்டு உரிமை உள்ளது. அதனை மறுத்த ரெயில்வே நிர்வாகம் கோவிலை ஆக்கிரமிப்பு செய்து மூலவர் உள்ள இடத்தில் சிமெண்டு மூட்டைகளை அடுக்கியும், தளவாட பொருட்களை நிரப்பி குடோனாக பயன்படுத்தி வருகிறது.
மேலும் எங்கள் கோவிலை இடித்து மண்ணைக்கொண்டு வந்து நிரப்ப திட்டமிட்டுள்ளனர். இது எங்கள் மனதை புண்படுத்துவதோடு, வழிபாட்டு உரிமையை பறிக்கும் செயல் ஆகும். கோவில் அருகே மண்ணை கொட்டியதன் காரணமாக மழைநீர் வடிகால்வாய்க்கால் இருக்கும் இடம் தெரியாமல் போய் விட்டது. இதனால் எதிர்காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கோவில்களை இடிக்க எதிர்ப்பு தெரிவிப்பதோடு, 2 கோவில்களையும் ரெயில்வே நிர்வாகத்திடம் இருந்து மீட்டுக்கொடுக்க வேண்டும். மானோஜிப்பட்டி அம்பேத்கர் நகரில் வசிக்கும் மக்களுக்கு மனைப்பட்டா வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பட்டுக்கோட்டையை அடுத்த பொன்னவராயன்கோட்டையை சேர்ந்த வீரசேனன் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் “திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியையும், தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையையும் இணைக்கும் புதிய அகல ரெயில்பாதை அமைக்கும் பணி செயல்படுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. ரெயில்பாதை அமைக்க ஆய்வுப்பணி நடந்த போது பொன்னவராயன்கோட்டை, பொன்னவராயன்கோட்டை உக்கடை, நாடியம்பாள்புரம் ஆகிய கிராமங்களின் வழியாக பட்டுக்கோட்டை ரெயில் நிலையத்திற்கு ரெயில்பாதை செல்லும் வகையில் ஆய்வு பணிகள் நடைபெற்றது.
ரெயில்பாதை அமைக்கப்பட உள்ள இந்த கிராமங்களில் அதிக அளவில் வீட்டுமனைகள் கோவில்கள் உள்ளன. இதனால் உத்தேசிக்கப்பட்ட ரெயில்பாதையை வேறு வழியில் கொண்டு செல்ல வேண்டும் என்று கலெக்டரிடம் மனு கொடுத்தோம். கருத்து கேட்பு கூட்டத்திலும் எதிர்ப்பு தெரிவித்தோம். இந்த நிலையில் மன்னார்குடி- பட்டுக்கோட்டை அகல ரெயில்பாதை மேற்கண்ட கிராமங்கள் வழியாக அமைக்கப்படும் என கலெக்டர் தலைமையில் நடந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அமைந்தால் மக்களுக்கு நஷ்டமும், மன உளைச்சலும், சேதமும் ஏற்படும். எனவே கலெக்டர் மாற்று வழியில் புதிய ரெயில்பாதை அமைக்க ரெயில்வே நிர்வாகத்திற்கு தகுந்த பரிந்துரையை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்”என அதில் கூறி உள்ளார்.

Related Tags :
Next Story