குப்பைக்கிடங்கில் அடிக்கடி எரியும் தீயால் சுகாதார சீர்கேடு நடவடிக்கை எடுக்க கோரிக்கை


குப்பைக்கிடங்கில் அடிக்கடி எரியும் தீயால் சுகாதார சீர்கேடு நடவடிக்கை எடுக்க கோரிக்கை
x
தினத்தந்தி 7 Feb 2018 4:15 AM IST (Updated: 7 Feb 2018 2:43 AM IST)
t-max-icont-min-icon

பரமத்தி வேலூரில் உள்ள குப்பைக்கிடங்கில் அடிக்கடி எரியும் தீயால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

பரமத்தி வேலூர்,

பரமத்தி வேலூர் வட்டத்தில் 5 பேரூராட்சிகள் உள்ளன. அதிக மக்கள் தொகை கொண்ட பேரூராட்சிகளில் பரமத்தி வேலூர் பேரூராட்சி ஒன்றாக உள்ளது. மொத்தமுள்ள 18 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் பரமத்தி வேலூரில் இருந்து நாமக்கல் செல்லும் பழைய தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள பேரூராட்சி குப்பைக்கிடங்கில் கொட்டப்படுகிறது.

இந்த குப்பைக்கிடங்கில் வளமீட்பு பூங்கா உள்ளது. இதில் மக்கும், மக்காத குப்பைகளை பிரித்து மண்புழு உரம் தயார் செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஒருமுறை பயன்படுத்தப்படும் தண்ணீர் மற்றும் குடிநீர் பானங்களின் பிளாஸ்டிக்கால் ஆன புட்டிகளை சேகரித்து நிழற்குடை, செடிகள் வளர்ப்பு உள்ளிட்டவைகளை பேரூராட்சி நிர்வாகம் செய்து வருகிறது.

ஆனால் தேங்கியுள்ள குப்பைக்கிடங்கில் அடிக்கடி தீ வைத்து எரித்து வருகின்றனர். இதனால் ஏற்படும் கரும்புகை மூட்டத்தால் சுற்றுப்புற மாசு ஏற்படுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும், இதை உடனடியாக மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொண்டு இதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story