காருடன் ரூ.90 லட்சம் கொள்ளை: தனியார் நிறுவன ஊழியர்-டிரைவர் உள்பட 5 பேர் கைது
பெங்களூருவில் ஏ.டி.எம். மையங்களுக்கு நிரப்ப வேண்டிய ரூ.90 லட்சத்தை காருடன் கொள்ளையடித்து சென்ற வழக்கில் தனியார் நிறுவன ஊழியர்-டிரைவர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில் காரில் ரூ.1.12 கோடி இருந்ததாக புதிய தகவல் வெளியானது.
பெங்களூரு,
பெங்களூருவில் உள்ள வங்கிகளில் பணம் பெற்று அந்தந்த வங்கிகளுக்கு சொந்தமான ஏ.டி.எம். மையங்களில் அதை நிரப்பும் பணியை செய்யும் தனியார் நிறுவனத்தில் நடராஜ் என்பவர் பாதுகாவலராக பணியாற்றி வருகிறார். நரசிம்மராஜூ(வயது 28) என்பவர் ஊழியராகவும், நாராயணசாமி(45) என்பவர் டிரைவராகவும் வேலை பார்த்து செய்து வந்தனர். கடந்த மாதம்(ஜனவரி) 29-ந் தேதி இவர்கள் 3 பேரும் பல்வேறு ஏ.டி.எம். மையங்களில் பணம் நிரப்பினார்கள்.
ஞானபாரதி அருகே சென்றபோது நடராஜிடம் ரூ.100 கொடுத்து வாழைப்பழம் வாங்கி வரும்படி நரசிம்மராஜூ, நாராயணசாமி ஆகியோர் கூறினர். இதனால் நடராஜ் அங்கிருந்து அருகே உள்ள கடைக்கு சென்றார். இந்த வேளையில், ரூ.90 லட்சம் இருந்த காரை அவர்கள் 2 பேரும் அங்கிருந்து ஓட்டி சென்றுவிட்டனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த நடராஜ் காருடன் ரூ.90 லட்சத்தை கொள்ளையடித்து சென்றதாக நரசிம்ம ராஜூ, நாராயணசாமி ஆகியோர் மீது ஞானபாரதி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில், அவர்கள் ராமநகர் மாவட்டம் மாதநாயக்கனஹள்ளி அருகே உள்ள கித்தனஹள்ளியில் காரை நிறுத்திவிட்டு ரூ.90 லட்சத்துடன் சென்றுவிட்டனர். இதுகுறித்து அறிந்த போலீசார் அந்த காரை மீட்டனர். மேலும், தலைமறைவாக இருந்த நரசிம்மராஜூ, நாராயணசாமி ஆகியோரை தீவிரமாக தேடிவந்தனர். அவர்களுடைய செல்போன் சிக்னல்களை போலீசார் ஆய்வு செய்து வந்ததன் மூலம் அவர்கள் பல்லாரியில் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, நேற்று முன்தினம் அங்கு சென்ற போலீசார் ஊழியர் நரசிம்மராஜூ, டிரைவர் நாராயணசாமி, அவர்களுக்கு உடந்தையாக இருந்த ரியாஸ்(30), ஜெகதீஷ்(28) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், நாராயணசாமி ரூ.15 லட்சம் கடன் வாங்கி இருந்ததும், கடனை அடைக்க அவர் ஏ.டி.எம். எந்திரங்களில் நிரப்பும் பணத்தை கொள்ளையடிக்க திட்டம் தீட்டியதும், அதற்கு நரசிம்மராஜூ, ரியாஸ், ஜெகதீஷ் ஆகியோர் உதவி செய்ததும் தெரியவந்தது.
கித்தனஹள்ளியில் காரை நிறுத்திய அவர்கள் பஸ் மூலம் பல்லாரி சென்றதும், அங்கிருந்து கோவாவுக்கு சென்று மதுபானம் அருந்தி சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததும் தெரியவந்தது. மேலும், நாராயணசாமிக்கு உதவி செய்த இன்னொருவர் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தேடிவருகிறார்கள். கைதானவர்களிடம் இருந்து ரூ.80 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், இவர்களுடன் தொடர்பு கொண்ட ரவி என்பவர் தலைமறைவாக இருந்தார். அவரை நேற்று போலீசார் கைது செய்தனர். இவரிடம் இருந்து 2 கார்கள், ஒரு மோட்டார் சைக்கிள், 2 ‘ஏர்கன்‘ ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், விசாரணை நடைபெற்று வருகிறது. கைதான ரவியிடம் விசாரித்தபோது காரில் ரூ.1.12 கோடி இருந்தது தெரியவந்துள்ளது. ரூ.80 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ள நிலையில் மீதமுள்ள ரூ.32 லட்சம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Related Tags :
Next Story